அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 1 May 2013

9 வயது மகனை கார் ஓட்ட அனுமதித்த பணக்கார தந்தை கைது (வீடியோ இணைப்பு)

 2013,
பிரபல தொழில் அதிபரான கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் நிஷாம். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
மூத்த மகன் பெயர் இஷால் (வயது 10). சமீபத்தில் இஷால் தனது 10-வது பிறந்த நாளை கொண்டாடினான். இவனது பிறந்தநாள் விழா கோலாகலமாக நடைபெற்றது. உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டு ஏராளமான பரிசுகளை வழங்கினார்கள்.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அவனது தந்தை நிஷாம் ரூ.3 1/2 கோடி மதிப்புள்ள 'பெராரி 430' என்ற விலை உயர்ந்த வெளிநாட்டு காரை இஷாலுக்கு பரிசாக வழங்கினார். இந்த கார் பந்தயங்களில் பயன்படுத்தப்படும் அதிக திறன் கொண்டதாகும்.
இஷாலுக்கு சிறு வயதிலேயே நிஷாம் கார் ஓட்ட கற்றுக்கொடுத்துள்ளார். முதலில் அவனை தனது மடியில் அமர வைத்து விளையாட்டாக கார் ஓட்ட வைத்தார். ஆனால் இஷாலின் ஆர்வம் காரணமாக அவன் தனியாகவே கார் ஓட்ட விரைவில் கற்று கொண்டான். மகனின் ஆர்வத்தை உணர்ந்த நிஷாம் பிறந்தநாள் பரிசாக இந்த விலை உயர்ந்த காரை பரிசு அளித்தார். இந்த பரிசு இப்போது நிஷாமை சிக்கலில் சிக்க வைத்துள்ளது.
தந்தை பரிசாக வழங்கிய அந்த காரில் தனது 5 வயது சகோதரனை அருகில் உட்கார வைத்துக்கொண்டு இஷால் வேகமாக காரை ஓட்டுவது போன்ற வீடியோ இணைய தளத்தில் வெளியானது. இதை ஏராளமானோர் பார்த்து வியந்தனர். அதே சமயம் சிறுவனிடம் காரை கொடுத்து ஆபத்தோடு விளையாடுவதா? என்று பதறிப்போன சிலர் இதுபற்றி திருச்சூர் ஆர்.டி.ஓ. கவனத்திற்கு கொண்டு சென்றனர். அவரும் இணைய தளத்தில் அந்த காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி திருச்சூர் பொலிசில் ஆர்.டி.ஓ. புகார் செய்தார். இதைத்தொடர்ந்து சிறுவனை வேகமாக கார் ஓட்ட வைத்தது, லைசென்சு பெறும் வயது வருவதற்கு முன்பே கார் வாங்கி கொடுத்தது என்பது உள்பட பல பிரிவுகளில் தொழில் அதிபர் நிஷாம் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அவரை பொலிசார் இன்று கைது செய்தனர். கைது செய்த உடனே அவர் ரூ. 5000 ரொக்க ஜாமீனில் வெளியில் வந்தார். அவர் இந்த காரின் ஆவணங்களை பொலிஸ் நிலையம் மற்றும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.
newindianews thanks

No comments:

Post a Comment