
May 2, 2013 09:39 am
தனது
மகனும் மருமகளும் தன்னை மோசமாக நடத்துவதாக வயோதிப தாயொருவர் செய்திருந்த முறைப்பாட்டை விசாரித்த இந்திய
நீதிமன்றமொன்று வீட்டுக்குள் நடப்பவற்றை கண்காணிக்க சிசிடிவி கேமராக்களை
பொருத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
மகனும்
மருமகளும் நடந்துகொள்ளும் முறையைக் கண்காணிப்பதற்காக காவல்துறையினர் கமராவில் பதிவாகும்
காட்சிகளை அடிக்கடி சோதிக்க
வேண்டும் என்றும் ராஜஸ்தானில் உள்ள நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.
72
வயதான விம்லா தாரிவால் என்ற அந்த விதவைத் தாய்,
தன்னை தனது மகன் அடிக்கடி தாக்குவதுடன் வீட்டைவிட்டு
வெளியே அனுப்பவும் முயற்சிப்பதாகக்
குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் பல தலைமுறைகளாக ஒரே வீட்டில் சேர்ந்து
வாழ்ந்துவருகின்ற கூட்டுக் குடும்பங்கள் பெருமளவில் உள்ளன.
இந்தக்
குடும்பங்களில் அடிக்கடி ஏற்படுகின்ற சொத்துத் தகராறுகள் போலிஸ்,
நீதிமன்றம் வரை செல்வது வழக்கம்.
எனினும்,
இவ்வாறான பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு அளிக்கப்படும் தீர்ப்புகளில் புதிய மாறுதலாக முதற்தடவையாக
நீதிமன்றமொன்று சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களை பொருத்துமாறு
உத்தரவிட்டுள்ளது.
இதுபோன்ற வழக்குகளுக்கு இந்த தீர்ப்பு முன்மாதிரியாக
அமைந்துவிடுமா என்பது தெரியவில்லை என்று அவதானிகள் கருதுகின்றனர்.
thamilan. thanks
No comments:
Post a Comment