
May 2,
2013 09:34 am
சிங்கப்பூரில் மக்கட் தொகையை உயர்த்த அரசு
வகுத்துள்ள திட்டத்துக்கு எதிராக நடைபெற்ற ஒரு அசாதாரணமான எதிர்ப்பு
போராட்டத்தில் சுமார் 3000 பேர்
பங்குபெற்றுள்ளனர்.
வெளிநாட்டினரைக் கொண்டு சிங்கப்பூரின் மக்கட் தொகையை
உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
ஒரு நகரத்தை மட்டுமே நாடாகக்
கொண்டுள்ள சிங்கப்பூர் ஏற்கெனவே ஜனநெருக்கடி மிகுந்த
இடமாக உள்ளது என்று இந்தத் திட்டத்துக்கு எதிரானவர்கள் கூறுகிறார்கள்.
தற்போது
அங்கிருக்கும் வெளிநாட்டவர்களாலேயே அங்கு ஊதியங்கள் உயராமல் நிலையாக உள்ளது என்றும், வீட்டின் விலைகள் இரட்டிப்பாகியுள்ளது என்றும் அவர்கள்
கூறுகிறார்கள்.
அங்கு
பிறப்பு வீதம் மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால் 2030 ஆம்
ஆண்டுவாக்கில் நாட்டின் மக்கட் தொகையை முப்பது சதவீதம் உயர்த்தி69 லட்சம்
அளவுக்கு கொண்டுவர ஆட்சியில் இருகும் மக்கள் செயல் கட்சி
திட்டங்களை முன்வைத்துள்ளது.
அந்தக்
கட்சியே 1965
ஆம் ஆண்டு சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஆட்சி
செய்து வருகிறது.
thamilan. thanks
No comments:
Post a Comment