திருப்பூர்: ரேஷன் கடை, கூட்டுறவு சங்கங்கள், அம்மா உணவகம் என்று சொல்லக் கூடிய குறைந்த விலை உணவகங்கள் உள்ளிட்ட தமிழக அரசின் கீழ் இயக்கும் அத்தனை துறைகளிலும் முதல்வரின் போட்டோவை
வைக்கிறார்கள். டாஸ்மாக் மதுபானக்கடை தமிழக அரசால் நடத்தப்படுகிறது. அதனால் தமிழக அரசின் திட்டம் என்று முதல்வரின் போட்டோவை நிச்சயமாக அனைத்து டாஸ்மாக் கடைக்கு முன்பாக வைக்க வேண்டும் என்று விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கோரியுள்ளார். திருப்பூரில் நடந்த தேமுதிக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், ஒரு சர்வே ரிப்போர்ட் சொல்கிறது. தமிழ்நாட்டில் இளம் விதவைகள் அதிகம் உருவாகின்றனர். அது எதனால் என்றால் டாஸ்மாக் கடை மூலமாக என்று ஒரு கொடும் சொல்லை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளோம். உண்மையிலேயே தாய்குலத்தை வாழவைக்கிறோம் என்று சொல்வதை நிரூபிக்க ஆளும் கட்சி டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். ரேஷன் கடை, கூட்டுறவு சங்கங்கள், அம்மா உணவகம் என்று சொல்லக் கூடிய குறைந்த விலை உணவங்கள் உள்ளிட்ட தமிழக அரசின் கீழ் இயக்கும் அத்தனை துறைகளிலும் முதல்வரின் போட்டோவை வைக்கிறார்கள். டாஸ்மாக் மதுபானக்கடை யாரால் நடத்தப்படுகிறது. தமிழக அரசால் நடத்தப்படுகிறது. அதனால் தமிழக அரசின் திட்டம் என்று முதல்வரின் போட்டோவை நிச்சயமாக அனைத்து டாஸ்மாக் கடைக்கு முன்னால் வைக்க வேண்டும். எல்லா டாஸ்மாக் கடைகளிலும் முதல்வரின் திட்டம், தமிழக அரசின் திட்டம் என்று சொல்லி, முதல்வர் ஜெயலலிதாவின் போட்டோவை வைத்துவிட்டு அனைத்து டாஸ்மாக் கடைகளையும் நடத்துங்கள். அதே நேரத்தில் உங்கள் போட்டோவை எந்த டாஸ்மாக் கடைகளிலும் வைக்கவில்லை என்றால், ஒட்டுமொத்த பொதுமக்களோடு இணைந்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் களத்தில் இறங்கும். அந்த பணியை நாங்கள் கையில் எடுத்து செய்யும் நிலைமையை தமிழ்நாட்டில் கொண்டுவராமல் செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு. மற்ற எல்லாவற்றிலும் பெருமைப்படுகிறீர்கள். தாய் திட்டம், அம்மா திட்டம் என்று எல்லா இடத்திலேயேயும் அம்மா படம் இருக்கிறது. இங்கேயும் உங்க அம்மா போட்டோவை வையுங்கள். அப்ப நாங்கள் உங்க அம்மா திட்டத்தை ஒத்துக்கிறோம். அம்மா உணவத்தை எல்லாரும் என்ன சொல்லுகிறார்கள் தெரியுமா? டாஸ்மாக் கடையை திறந்து வைத்து, சைடிஸ்க்கு அம்மா உணவத்தை திறந்து வைத்துள்ளார்கள் என்று சொல்லுகிறார்கள். சென்னையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் அம்மா உணவகம் வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் அம்மா உணவகம் வரப்போகிறது. வரட்டும். அதைப்பற்றி எங்களுக்கு ஒன்றும் இல்லை. அம்மா உணவகத்தில் எப்படி உங்களுடைய போட்டோவை வைக்கிறீர்களோ, அதைப்போலவே டாஸ்மாக் கடைகளில் உங்கள் போட்டோவை வைத்துவிட்டு டாஸ்மாக் கடையை நடத்துங்கள். இல்லையென்றால் மக்களோடு மக்களாக இணைந்து நாங்கள் அந்தப் பணியை செய்வோம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
என்றார். போட்டோ பத்தி மட்டுமே நேற்று பிரேமலதா ரொம்ப நேரம் பேசினார்!
tamil.oneindia thanks
No comments:
Post a Comment