- MONDAY, 13 MAY 2013 00:26

அமெரிக்காவின் நியூ ஒர்லியன்ஸில் இடம்பெற்ற அன்னையர் தின கவனயீர்ப்பு ஊர்வலத்தில் திடீரென இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் நான்கு பேருக்கு அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதாக மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதுவரை எவரும் உயிரிழக்கவில்லை. காயடைந்தவர்களில் 10 வயது சிறுமியும் அடங்குவார். துப்பாக்கிச்சூட்டினை யார் நிகழ்த்தினார்கள். எந்த காராணத்திற்காக இத்தாக்குதல் இடம்பெற்றது என்பது குறித்து இன்னமும் தகவல் வெளியாகவில்லை.
இரண்டு அல்லது மூன்று சந்தேக நபர்கள் சம்பவ இடத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளனர். 200க்கு மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்திருந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
அண்மையில் அமெரிக்காவில் பாஸ்டன் மரதன் போட்டியிகளின் போது இடம்பெற்ற தீவிரவாத குண்டுத்தாக்குதலி பலர் பலியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

4tamilmedia thanks
No comments:
Post a Comment