பாகிஸ்தானில் மாற்றம் காண அனைவரும் வாக்களியுங்கள்: மலாலா கருத்து
[ சனிக்கிழமை, 11 மே 2013,
பாகிஸ்தானில் நாடளுமன்றம் மற்றும் 4 மாகாண சட்டசபைகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகின்றது.
இதில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி, நவாஸ் செரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்), இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் ஆகிய கட்சி கூட்டணிகள் இடையே மும்முனை போட்டிகள் நடக்கிறது.
பாகிஸ்தான் தலிபான்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் பிழைத்த சிறுமி மலாலா தற்போது பிரிட்டனில் வாழ்ந்து வருகிறார். இவர் தேர்தலை சந்திக்கும் பாகிஸ்தான் மக்களுக்கு, வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில் மலாலா கூறுகையில், எனது நாட்டில் வாழும் என் சகோதர சகோதரிகளுடன் சில வார்த்தைகளை பகிர்ந்து கொள்வது எனக்கு பெருமையாக உள்ளது. கல்வி, மின்சாரம் மற்றும் இயற்கை எரிவாயு நம் நாட்டில் கிடைக்க வேண்டும் என்றால் நாம் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
நமது வாக்குகளின் சக்தியை நாம் ஒரு போதும் உணர்ந்தது இல்லை. ஒரு ஒட்டு நமது எதிர்காலத்தை மாற்றிவிடும். நமது நாட்டுக்காக வாக்களிப்போம். நமது தாய் நாட்டை யார் ஆட்சி செய்வது என்பதை நமது வாக்குகளே தீர்மானிக்கும்.
அனைத்து சகோதரிகளும், அம்மாக்களும் முன்வந்து ஓட்டுப்போட வாக்கு சாவடிகளுக்கு செல்ல வேண்டும். ஒரு நாள் நிச்சயம் மாற்றம் வரும். அனைத்து சிறுமிகளும், சிறுவர்களும் பள்ளிக்கு செல்வார்கள். நாடு முழுவதும் அமைதி நிலவும். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment