இங்கிலாந்தில் குழந்தைகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைப்பவர்களுக்கு சிறை தண்டனை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற பல நாட்டு மக்கள் இங்கிலாந்தில் வசிக்கின்றனர். இவர்கள் குடும்ப கவுரவத்துக்காக இளம் வயதிலேயே தங்கள் குழந்தைகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.
மதம், ஜாதி மாறி காதலிப்பவர்களை கவுரவ கொலைகளும் செய்து விடுகின்றனர். இவற்றை தடுக்க இங்கிலாந்து அரசு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
எனினும் கட்டாய திருமணங்களும், கவுரவ கொலைகளும் அவ்வப்போது நடந்து வருகின்றன.
கடந்த 2008ம் ஆண்டு மட்டும் 1,600க்கும் அதிகமான கட்டாய திருமணங்கள் நடந்ததாக புகார்கள் வந்துள்ளன.
இங்கிலாந்தில் வசிக்கும் பல்வேறு நாட்டு பிரதிநிதிகள், பொலிசார், உள்துறை, சட்டத் துறை போன்றவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய, கட்டாய திருமண தடுப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
இப்பிரிவில் தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக இந்தியாவின் பஞ்சாப், மேற்குவங்கம், குஜராத் மாநில மக்கள்தான் கட்டாய திருமணங்களில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது. இவர்களில் 85 சதவீதம் இளம்பெண்கள் கட்டாய திருமணங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கட்டாய திருமணங்கள் செய்து வைக்கும் பெற்றோரை தண்டிக்கும் வகையில் புது சட்டம் கொண்டு வர இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளனர்.
மேலும், பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளை கண்காணிக்கவும், அவர்களில் யாருக்காவது கட்டாய திருமணம் செய்ய போவது பற்றி அறிந்தால் தகவல் அளிக்கவும் பள்ளிகளுக்கு தனியாக நிதியுதவி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கூறுகையில், கட்டாய திருமணம் என்பது அடிமைத்தனத்தை விட பெரிது.
ஒருவரின் விருப்பத்துக்கு எதிராக கட்டாய திருமணம் செய்து வைப்பது தவறு. அதனால்தான் புது சட்டம் கொண்டு வரப்பட உள்ளது என்றார்.
.newsonews thanks
|
No comments:
Post a Comment