
பின்னலாடை தொழிலை மேம்படுத்த வலியுறுத்தியும், மின்வெட்டை கண்டித்தும் திருப்பூரில் தேமுதிக சார்பில் 12.05.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்,
பேரணி நடத்த இருந்தோம். காவல்துறை கேட்டதற்கு இணக்க பேரணி வேண்டாம் என்றோம். ஏனென்றால் நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். எனக்கு எத்தனை போலீஸ் பாதுகாப்பு கொடுத்தார்கள். எனது கட்சியின் தொண்டர் படைதான் பாதுகாப்பு கொடுத்தார்கள்.
என்னுடைய பேச்சு முன்னப் பின்ன இருக்கும். விஜயகாந்த்துக்கு பேச தெரியாது என்று சொல்லுகிறார்கள். அதைப்பற்றி கவலையில்லை. எனக்கு ஜெயிக்கத் தெரியும்.
எனது மனைவி சொன்னதுபோல, தொட்டதற்கெல்லாம் அம்மா, அம்மா என்று சொல்கிறீர்களே, அதைப்போல அம்மாவின் மதுபானக்கடை என்று போடுங்களேன் பார்த்துவிடுவோம். ஏன் அதற்கு மட்டும் டாஸ்மாக் என்று வைக்கிறீர்கள். அவர்கள் போட்டோவுடன் அம்மாவின் மதுபானக்கடை என்று வையுங்கள்.
நீங்கள் சட்டத்தை மதிக்க வேண்டும். கோர்ட் என்ன சொன்னது. நீதியரசர்கள் என்ன சொன்னார்கள். ஹைவேயில் உள்ள 500 மதுபான கடையை எடுங்கள் என்று சொன்னார்கள். எடுத்தீர்களா. அந்தக் கடையை எடுத்து ஊருக்குள் வைக்கிறார்கள். ஏன் மூட வேண்டியதுதானே. ஒரு நாளைக்கு 2 ஆயிரம், 3 ஆயிரம் கோடி வருமானம் வராது. வராமல் போகட்டுமே.
20 கிலோ அரிசி இலவசமாக கொடுக்கிறோம் என்கிறார்கள். 20 கிலோ அரிசி போதுமானதா. அந்த அரிசி தரமானதா. கிலோ 20 ரூபாய்க்கு அரிசி கொடுக்கிறோம் என்கிறாக்ள். ரேஷன் அரிசியை பாலீஷ் செய்து ரூபாய் 20க்கு விற்கிறார்கள். அந்த திட்டம் தோல்விடையந்தது. இலவசம் இருக்கும் வரை ஜெயல-தா இருப்பார். வேலை கொடுப்பதாக சொல்கிறீர்களா. தா-க்கு தங்கம் கொடுப்பதாக சொல்கிறீர்கள். ஆடு, மாடு கொடுப்பதாக சொல்கிறீர்கள். ஆனால் வேலை கொடுப்பதாக சொல்கிறீர்களா. ஓய்வு பெற்றவர்கள் இடத்தில் வேலை கொடுத்துள்ளனர். புதிய வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளீர்களா. உருவாக்கவில்லை. இவ்வாறு பேசினார்.
nakkheeran. thanks
No comments:
Post a Comment