அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday, 12 May 2013

நாளை பதவி ஏற்கிறார் பெங்களூர் கண்டீரவா மைதானத்தில் பிரமாண்ட விழா


கர்நாடகத்தில் 7 ஆண்டுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைகிறது (பாக்ஸ்) 28–வது முதல்–மந்திரியாக சித்தராமையா 

பெங்களூர்
கர்நாடக மாநிலத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைகிறது. 28–வது முதல்–மந்திரியாக சித்தராமையா இன்று (திங்கட்கிழமை) பதவி ஏற்கிறார். பெங்களூர் கண்டீரவா மைதானத்தில் நடைபெறும் பிரமாண்டமான விழாவில், சித்தராமையாவுக்கு கவர்னர் பரத்வாஜ் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். கர்நாடகத்தில் கடந்த 5–ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மைசூர் மாவட்டம் பிரியபட்டணா தொகுதி நீங்கலாக இதர 223 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்பட்டது.

காங்கிரஸ் அமோக வெற்றி
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 121 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தலா 40 தொகுதிகளிலும், கர்நாடக ஜனதா கட்சி 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதைத்தொடர்ந்து கர்நாடகத்தில் 7 ஆண்டுக்கு பிறகு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது.
சித்தராமையா முதல்–மந்திரி
ஆனால் முதல்–மந்திரியை தேர்ந்தெடுப்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் இழுபறி நீடித்தது. மல்லிகார்ஜுன கார்கே, டி.கே.சிவக்குமார், பரமேஷ்வர், சித்தராமையா, ஆர்.வி தேஷ்பாண்டே, சாமனூர் சிவசங்கரப்பா, டி.பி.ஜெயச்சந்திரா போன்ற தலைவர்கள் முதல்–மந்திரிக்கான போட்டியில் இருந்ததே இந்த இழுபறிக்கு காரணமாகும். இவர்களில் பரமேஷ்வர் தேர்தலில் தோல்வி அடைந்ததால் அவரது முதல்–மந்திரி கனவு தகர்ந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் சித்தராமையா, காங்கிரஸ் கட்சியின் சட்டசபை கட்சி தலைவராக (முதல்–மந்திரியாக) ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆட்சி அமைக்க அழைப்பு
இதைத்தொடர்ந்து கவர்னர் பரத்வாஜை, சித்தராமையா கவர்னர் மாளிகையில் சந்தித்து, ஆட்சி அமைக்க தனக்கு அனுமதி வழங்கும்படி கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கவர்னர் பரத்வாஜ், ஆட்சி அமைக்கும்படி சித்தராமையாவுக்கு அனுமதி அளித்து அதற்கான கடிதத்தையும் வழங்கினார்.
இன்று பதவி ஏற்பு
இதைத்தொடர்ந்து சித்தராமையா புதிய முதல்–மந்திரியாக நாளை (திங்கட்கிழமை) பதவி ஏற்கிறார். பெங்களூரில் உள்ள கண்டீரவா மைதானத்தில் நடைபெறும் பிரமாண்டமான விழாவில் இன்று காலை 11.50 மணிக்கு சித்தராமையா முதல்–மந்திரியாக பதவி ஏற்றுக் கொள்கிறார். அவருக்கு கவர்னர் பரத்வாஜ் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியில் கர்நாடகம் முழுவதிலும் இருந்து காங்கிரஸ் தலைவர்கள், பிரமுகர்கள், தொண்டர்கள் என்று பல்லாயிரக்கணக்கானவர்கள் பெங்களூர் வருகிறார்கள். சுமார் ஒரு லட்சம் பேர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விழா நடைபெறும் கண்டீரவா விளையாட்டு மைதானத்தின் உள்ளேயும், வெளியேயும், நகரின் முக்கிய இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
28–வது முதல்–மந்திரி
புதிய முதல்–மந்திரியாக பதவி ஏற்க இருக்கும் சித்தராமையா, கர்நாடகத்தின் 28–வது முதல்–மந்திரி ஆவார். இன்று சித்தராமையா மட்டும் பதவி ஏற்றுக் கொள்கிறார். மந்திரிகள் யாரும் இன்று பதவி ஏற்க மாட்டார்கள். மந்திரிகளாக யார்–யாரை நியமிப்பது என்பது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் சித்தராமையா ஆலோசனை நடத்தி பட்டியலை காங்கிரஸ் மேலிடத்துக்கு அனுப்புவார். மேலிட தலைவர்கள் மந்திரிகள் பட்டியலை பரிசீலித்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் அனுமதிக்காக அனுப்பி வைப்பார்கள். சோனியா காந்தியின் ஒப்புதலுக்கு பிறகு புதிய மந்திரிகள் பதவி ஏற்பார்கள்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
சித்தராமையா பதவி ஏற்பு விழாவையொட்டி 5 ஆயிரம் சாதாரண போலீசார், 3 ஆயிரம் கே.எஸ்.ஆர்.பி. போலீசார், 1,000 சி.ஏ.ஆர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள் என்று நகர போலீஸ் கமிஷனர் ராகவேந்திர அவுராத்கர் கூறினார். மேலும் அவர் கூறியதாவது:– நான் உள்பட அனைத்து கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் பதவி ஏற்பு விழா நடைபெறும் கண்டீரவா ஸ்டேடியத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறோம். அந்த மைதானத்தின் அனைத்து நுழைவு வாயில்களிலும் பலத்த சோதனைக்கு பிறகே பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். வாகன நிறுத்தத்திற்கு என்று தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும்.
முன்எச்சரிக்கை நடவடிக்கை
நான் அந்த மைதானத்தை சுற்றி பார்த்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு நடத்தினேன். தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. போலீஸ் டி.ஜி.பி.யும் விழா நடைபெறும் இடத்தை நேரில் ஆய்வு செய்து சில வழிகாட்டுதல்களை கூறியுள்ளார். இவ்வாறு ராகவேந்திர அவுராத்கர் கூறினார்.

dailythanthi thanks

No comments:

Post a Comment