றுக்கிழமை, 12, மே 2013 (9:16 IST)

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கு இடையே, பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.
தேர்தலில் 75 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகள் பதிவாகி இருந்தன. ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும், உடனடியாக ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. மின்வெட்டு மற்றும் ஊழலால் மக்கள் வெறுப்பு அடைந்த நிலையில், அதிபர் பதவி வகித்து வந்த சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி, தொடக்கத்தில் இருந்தே அந்த கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. முன்னாள பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) மற்றும் கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல் தலைவரான இம்ராம்கானின் கட்சியும் அதிக இடங்களில் முன்னணி பெற்று இருந்தன. இந்நிலையில், ஓட்டு எண்ணிக்கையில் அதிக வாக்குகளை பெற்று சர்கோடா தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் பெஷாவர் 1வது தொகுதியில் போட்டியிட்ட இம்ரான் கானும் வெற்றி பெற்றனர்.
nakkheeran thanks
No comments:
Post a Comment