அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 11 May 2013

கியாஸ் கசிவினால் தீ விபத்து: முன்னாள் பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தீயில் கருகினார்


கியாஸ் கசிவினால் தீ விபத்து: முன்னாள் பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தீயில் கருகினார்
ஆர்.எஸ்.மங்கலம், மே. 11-

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் முகமது கோயா தெருவை சேர்ந்தவர் ஷல்லி அப்துல் காதர் (வயது 55). இவரது மனைவி செய்யது சொகரா (48). இவர் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர். இவர்களது மூத்த மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மற்றொரு மகன் முகமது அர்ஷத் (23). மகள் நூருல் அய்நூல் (20) ஆகியோர் பெற்றோருடன் வசித்து வருகின்றனர்.

நேற்று இரவு குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் உணவு அருந்திவிட்டு தூங்கி கொண்டிருந்தனர். இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3 மணி அளவில் அவர்களது வீட்டில் இருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது அப்துல்காதர் வீடு தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் அதற்குள் வீட்டில் இருந்த செய்யது சொகரா உள்பட 4 பேரும் உடல் கருகி துடித்து கொண்டு இருந்தனர். அவர்களை விரைந்து மீட்ட தீயணைப்பு துறையினர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் தாய்-மகள் உள்பட 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு துறையினரும், போலீசாரும் விசாரணை நடத்தினர். இதில் கியாஸ் கசிவினால் தீ விபத்து நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இரவில் கியாஸ் கசிந்து வீடு முழுவதும் பரவி உள்ளது. இந்த நிலையில் அதிகாலையில் தண்ணீர் குடிக்க எழுந்த முகமது அர்ஷத், மின் விளக்கு சுவிட்சை போட்டுள்ளார். இதனால் தான் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தின்போது அதிக அழுத்தம் காரணமாக வீட்டில் கேட் பெயர்ந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது. தீயில் கருகிய நூருல் அய்நூல் கீழக்கரையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். முகமது அர்ஷத், எலக்ட்ரீசியனாக உள்ளார். அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டு 4 பேர் உடல் கருகிய சம்பவம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

maalaimalar thanks

No comments:

Post a Comment