சட்டபூர்வ கருகலைப்புக்கு அயர்லாந்து மந்திரிசபை ஒப்புதல்
[ வியாழக்கிழமை, 02 மே 2013,
அயர்லாந்து நாட்டில்
இந்தியாவை சேர்ந்த சவீதா(31) என்ற பெண் பல் டொக்டர் தனது கணவருடன் குடியிருந்து
வந்தார்.
அங்கு அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபொழுது வயிற்றுக்குள் இருந்த குழந்தையால்
பிரச்சினைகள் ஏற்பட்டன. இதனால் கருவை கலைக்க வேண்டும் என்று டொக்டர்கள்
கூறினார்கள். ஆனால் அயர்லாந்து நாட்டு சட்டப்படி கருக்கலைப்புக்கு அனுமதி இல்லை.
எனவே அவரது கருவை கலைக்க டொக்டர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அந்த குழந்தை
இறந்து பிறந்தது. குழந்தை வயிற்றுக்குள்ளேயே இருந்ததால் அவரது ரத்தம் விஷமாகி மாறி
சவீதாவும் இறந்து விட்டார்.
இது அயர்லாந்தில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியது. கருக்கலைப்புக்கு அனுமதி
அளிக்க வேண்டும் என்று அங்கு பெரும் போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து அந்த இடத்தில்
மாற்றம் கொண்டு வர அரசு முடிவு செய்தது.
தாய் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையில் கருக்கலைப்பு செய்யலாம் என்று
சட்டத்தில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.
இந்த சட்டத்திற்கு ஒப்புதல் பெருவதற்கான மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில் இந்த
சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இச்சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்டு முறைப்படி அனுமதி வழங்கப்படவுள்ளது
No comments:
Post a Comment