வங்கதேச ஜனாதிபதி ஜுலுர்
ரஹ்மான் இறந்ததை அடுத்து, அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு முதன்முறையாக பெண்
சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முதலில் நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த அப்துல் ஹமீத்(60), கடந்த சில நாட்களுக்கு
முன்னர் அந்நாட்டு ஜனாதிபதியாக பதவியேற்றார்.
இதையடுத்து காலியாக உள்ள சபாநாயகர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் வங்கதேச பெண்கள்
மற்றும் குழந்தைகள் விவகாரத்துறை அமைச்சர் ஷிரீன் ஷர்மின் சவுத்ரி தெரிவு
செய்யப்பட்டார்.
இவர் அந்நாட்டின் முதல் பெண் சபாநாயகர் ஆவார். இவரை அந்நாட்டு ஆளும் அவாமிக்
லீக் கட்சி ஒரு மனதாக அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment