அக்னி நட்சத்திர காலமான தற்போது வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை வங்கக்கடல் மீது காற்றின் மேல் நோக்கிய சுழற்சி காரணமாக இந்த வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 08.05.2013 அன்று சென்னைக்கு 1,200 கிமீ தொலைவில் தென்கிழக்கு வங்கக்கட-ல் குறைந்த காற்றழுத்தம் மையம் கொண்டுள்ளது.
இது தீவிரம் அடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மேலும் வலுவடைந்து புயலாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலுக்கு மகாசேன் என்று பெயர் சூட்டியுள்ளனர்.
இந்த புயல் தீவிர புயலாக மாறி, ஒரிசா அருகே 16ந் தேதிக்குள் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த வாரம் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
nakkheeran thanks
No comments:
Post a Comment