அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 9 May 2013

பிரான்சைத் தாக்கும் புதிய உயிர்கொல்லி வைரஸ்

[ வியாழக்கிழமை, 09 மே 2013, 
சார்ஸ்(SARS) போன்ற புதியதோர் உயிர்கொல்லி வைரஸ் தாக்கி சவுதி அரேபியாவில் 18 பேர் இறந்து விட்டதாகவும், அங்கிருந்து இங்கு வந்த விமானப்பயணி ஒருவர் அந்த கொரோனா(corona) வைரசுடன் வந்திருப்பதாகவும் பிரான்சில் சுகாதாரத்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்தப் பயணியிடம் மட்டுமே தற்பொழுது இந்த வைரஸ் காணப்படுகின்றது என்றும் இவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கண்காணிக்கப்படுகிறார் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
NcoV-Emc என்று குறிப்பிடும் இந்த வைரஸ் கடந்த செப்டம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை இந்த வைரஸ் சுமார் முப்பது பேரைத் தாக்கியுள்ளது. இதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
சவுதி அரேபியாவில் மட்டுமே இதுவரை 11 பேர் இந்த வைரசுக்குப் பலியாகியுள்ளனர். ஜோர்டான், ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் தற்பொழுது பிரான்சிலும் இந்த வைரசால் தாக்கப்பட்டவர்கள் இருப்பதாக மருத்துவமனைகளில் பதிவுகள் உள்ளன.
பத்தாண்டுகளுக்கு முன்னர் கிழக்கிந்தியாவை அச்சுறுத்திய சார்ஸ் வைரசுடன், இந்த கொரனோ வைரஸ் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது என்று மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் இந்த கொரனோ வைரஸ் சிறுநீரகச் செயலிழப்பை ஏற்படுத்துகிறது என்று உலக சுகாதார அமைப்பு இந்த வைரஸ் சர்வதேச விழிப்பை வலியுறுத்தியுள்ளது.

newsonews thanks

No comments:

Post a Comment