சென்னை, மே. 11-
வங்க கடலில் உருவான புயல் திசை மாறியதால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு தெற்கே, தென்மேற்கு வங்க கடலில் 3 நாட்களுக்கு முன் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது தீவிரம் அடைந்து நேற்று மதியம் காற்றழுத்த மண்டலமாக (புயலாக) மாறியது. தொடர்நது அது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. இந்த புயலுக்கு 'மகேசன்' என பெயரிடப்பட்டது.
இந்த புயல் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தால் தமிழ் நாட்டில் நல்ல மழை பெய்யும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இன்று மதியம் புயல் திசை மாறியதால் தமிழ்நாட்டுக்கு மழை வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:-
தென்மேற்கு வங்க கடலில் உருவான 'மகேசன்' புயல் இன்று காலை சென்னைக்கு தென் கிழக்கே 1550 கி.மீ. தொலைவில் மையம் கொண்டு இருந்தது. அது மேலும் வலுப்பெற்று அதி தீவிர புயலாக மாறியது. இன்று மதியம் சென்னையில் இருந்து 1300 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தால் தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த 34 மணி நேரத்தில் வடக்கு திசை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது புயல் வங்காள தேசம், மியான்மர் நோக்கி திசை மாறியது. இதனால் தமிழகத்தில் மழை வாய்ப்பு இல்லை.
வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்யும். அதே சமயம் இந்தப் புயல் தமிழ்நாட்டின் மீதான ஈரப்பதத்தை உறிஞ்சி இருந்து செல்வதால் அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்பத்தின் அளவு மேலும் அதிகரிக்கும். கடந்த 24 மணி நேரத்தில் ஈரோட்டில் 7 மி.மீ, தளியில் 4 மி.மீ மழை பெய்துள்ளது. கரூர், சங்ககிரியில் தலா 3 மி.மீ மழையும், ஊட்டி, ராசிபுரத்தில் தலா 2 மி.மீ மழையும் பெய்துள்ளது.
இவ்வாறு ரமணன் கூறினார்.

maalaimalar thanks
No comments:
Post a Comment