அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 11 May 2013

சட்ட மந்திரி கபில் சிபல்: புதிய ரெயில்வே மந்திரி சி.பி ஜோஷி


சட்ட மந்திரி கபில் சிபல்: புதிய ரெயில்வே மந்திரி சி.பி ஜோஷி
புதுடெல்லி, மே. 11-

மத்திய மந்திரிகள் பவன்குமார் பன்சால், அஸ்வினிகுமார் இருவரும் நேற்றிரவு தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ரூ. 10 கோடி லஞ்ச பேரத்தில் சிக்கியதால் பன்சாலும், நிலக்கரி ஊழல் அறிக்கையை திருத்திய சர்ச்சையில் சிக்கியதால் அஸ்வினிகுமாரும் பதவியை பறி கொடுத்துள்ளனர். பன்சால், அஸ்வினி குமார், இருவரும் காபினெட் அந்தஸ்து இலாகாவை கவனித்து வந்தனர். அவர்களது  ராஜினாமாவை உடனடியாக பிரதமரும், ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டனர். 

இதையடுத்து மத்திய மந்திரி சபையில் காலியாக உள்ள இடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மத்திய அமைச்சரவையில் ஏற்கனவே சில ராஜாங்க மந்திரிகள் பதவி நிரப்பப்படாமல் இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகியதால், தி.மு.க.வைச் சேர்ந்த 5 மத்திய மந்திரிகள் பதவியை ராஜினாமா செய்தனர். 

இதனால் சுமார் 10 மத்திய மந்திரி பதவி நிரப்பப்பட வேண்டியதுள்ளது. காலியாக உள்ள மத்திய மந்திரி பதவிகளில் ரெயில்வே, உரம், சட்டம் ஆகிய 3 முக்கிய காபினெட் இடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த 3 இலாகாகளும் மற்றவர்களிடம் கூடுதல் பொறுப்புகளாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த காலி இடங்களை உடனே நிரப்ப வேண்டிய நிர்ப்பந்தம் பிரதமர் மன் மோகன்சிங்குக்கு ஏற்பட்டது. இதுபற்றி அவர் காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் ஆலோசனை நடத்தினார். 

இதையடுத்து இன்று மதியம் மந்திரிசபை மாற்றம் பற்றிய தகவல்கள் வெளியானது. காலியாக உள்ள இலாகாகளில் ரெயில்வே துறை மிகவும் சக்தி வாய்ந்த துறையாகும். நிதீஷ்குமார், லல்லு பிரசாத், மம்தா பானர்ஜி ஆகிய தலைவர்கள் வகித்த இந்த பதவி நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டுதான் காங்கிரஸ் வசம்  கிடைத்தது. ஆனால் பன்சாலால் அதில் நீடிக்க முடியவில்லை. 

ரெயில்வே இலாகாவை பெற காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இடையே கடும் போட்டி இருந்தது. என்றாலும் ரெயில்வே மந்திரியாக சி.பி.ஜோஷி அறிவிக்கப்பட்டார். அவருக்கு இந்த இலாகாவுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. சட்ட மந்திரியாக கபில் சிபில் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இந்த இலாகா கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

maalaimalar thanks

No comments:

Post a Comment