அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday 26 June 2013

இங்கிலாந்து விசாவுக்கு ரூ. 2.5 லட்சம் டெபாசிட் திட்டத்துக்கு வலுப்பெறும் எதிர்ப்பு!

இந்தியா உட்பட 6 நாடுகளை சேர்ந்தவர்கள் இங்கிலாந்து விசாவுக்கு ரூபாய் இரண்டரை லட்சம் டெபாசிட் கட்டவேண்டும் என்கிற புதிய முடிவுக்கு உள்துறை கமிட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் சட்ட விரோதமாக தங்குபவர்களைத் தடுக்க, விசா நடைமுறைகளில் கடும் கட்டுப்பாடுகளை அரசு அமல் படுத்தி வருகிறது. இதன்  அடுத்த கட்டமாக இங்கிலாந்து வந்து செல்ல விசா பெறுவதற்கு இரண்டரை லட்சம் ரூபாய் டெபாசிட் செலுத்த வேண்டும் என்று, உள்துறை அமைச்சர் தெரசா மே நேற்று அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்புக்கு இங்கிலாந்து உள்துறை தேர்வு கமிட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை பிரதமர், டேவிட் கேமரூனின், சிறந்த மற்றும் பிரகாசமான பிரிட்டனுக்கு வாருங்கள் என்கிற அழைப்புக்கு எதிராக் அமைந்துள்ளது. மேலும், இது இங்கிலாந்தை பற்றிய தவறான எண்ணத்தை பிற நாடுகளிடையே உருவாக்கும். மேலும் குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும் இரண்டரை லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என்பது பார பட்சமானது. இன ரீதியான ஒடுக்குமுறையுமாகும்.

சுற்றுலா பயணிகளில் குழந்தைகள், மற்றும் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு இங்கிலாந்து நாட்டின் சட்டப்படி, இந்த விதி பொருந்தாது. எனவே, இந்த அவசர அறிவிப்பு குறித்து உள்துறை செயலர் தெரசாவிடம் வரும் ஜூலை 16ம் திகதி நடக்கும் உள்துறை தேர்வு கமிட்டி கூட்டத்தில் விளக்கம் கேட்கப்படும் என்று அந்த கமிட்டி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்களும் இந்த டெபாசிட் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

4tamilmedia thanks

No comments:

Post a Comment