ராமநாதபுரம்,
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பரமக்குடி மாணவன் மாநில அளவில் 3-ம் இடத் தையும், மாவட்ட அள வில் முதலிடத்தையும் பிடித்து சாதனை படைத் துள்ளார்.
முதலிடம்
ராமநாதபுரம் மாவட்ட அளவில் பரமக்குடி டான் பாஸ்கோ மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவன் எ.அகமது லாபிர் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3-வது இடமும் மாவட்ட அளவில் முதல் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவர் பாடவாரிய பெற்ற மதிப்பெண்கள் விவரம் வரு மாறு:-
தமிழ் - 98
ஆங்கிலம் - 99
கணிதம் - 100
அறிவியல் - 99
சமூகஅறிவியல் - 100
ஆங்கிலம் - 99
கணிதம் - 100
அறிவியல் - 99
சமூகஅறிவியல் - 100
2-வது இடம்
அபிராமம் முஸ்லிம் மேல் நிலைப்பள்ளி மாணவி ரிஷ் வானா பேகம் 495 மதிப்பெண் கள் மாவட்ட அளவில் 2ம் இடம் பிடித்துள்ளார். அவர் பாடவாரியாக பெற்ற மதிப் பெண்கள் விவரம் வரு மாறு:-
தமிழ் - 98,
ஆங்கிலம் - 97
கணிதம் - 100
அறிவியல் - 100
சமூகஅறிவியல் - 100
ஆங்கிலம் - 97
கணிதம் - 100
அறிவியல் - 100
சமூகஅறிவியல் - 100
மாணவி ரிஸ்வானாபேகம் கூறியதாவது:- தந்தை முகம் மது ரபீக் அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக உள் ளார். தாய் செய்யது அலி பாத்திமா. மாவட்ட அளவில் 2-வது இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மாநில அளவில் இடம் பிடிப்பேன் என்று எதிர்பார்த்தேன். அன் றைய பாடங்களை அன்றே படித்து விடுவேன். சந்தேகம் வந்தால் உடனே கேட்டு தெளி வுபடுத்திக் கொண்டதால் தேர்வை பற்றிய பயம் ஏற்பட வில்லை. எனது தந்தையும் ஆசிரியர் என்பதால் தினமும் பாடங்கள் குறித்த சந்தேகங் களை நிவர்த்தி செய்தார். பல் வேறு மாவட்டங்களில் வெளி யான கேள்விதாள்களை வரவ ழைத்து அதிக அளவில் தேர் வுகள் வைத்து தயார்படுத்தி னார். அதிகாலை எழுந்து படித்ததால் எனக்கு அனைத்து பாடங்களும் மன தில் நன்கு பதிந்து விட்டது. எதிர் காலத்தில் டாக்டராக பணியாற்றி சேவை செய்ய விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
3-ம் இடம்
ராமேசுவரம் விவேகா னந்தா வித்யாலயா மெட்ரிக் குலேசன் பள்ளி மாணவி மகா அபிராமி 494 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 3-வது இடத்தை பிடித்துள் ளார். அவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு:-
தமிழ் - 97
ஆங்கிலம் - 98
கணிதம் - 100
அறிவியல் - 99
சமூக அறிவியல் - 100
ஆங்கிலம் - 98
கணிதம் - 100
அறிவியல் - 99
சமூக அறிவியல் - 100
இவரது தந்தை முருகன். தாய் முனீஸ்வரி. முருகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சாதனை குறித்து மாணவி மகாஅபி ராமி கூறியதாவது:- பள்ளி முதல்வர், சுவாமிஜி, ஆசிரியர் கள் மற்றும் எனது பெற்றோர் நான் சாதனை படைக்க உறு துணையாக இருந்தனர். பள் ளியில் நடைபெறும் சிறப்பு வகுப்பில் தவறாது கலந்து கொண்டேன். பயோ கணிதம் பாடம் எடுத்து படித்து பிளஸ் -2 தேர்விலும் சாதனை படைப்பேன். எதிர்காலத்தில் டாக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார். மாணவிக்கு பள்ளி தாளாளர் சுவாமி சாரதானந்தா, முதல் வர் ஜெயமணி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார். மாணவிக்கு பள்ளி தாளாளர் சுவாமி சாரதானந்தா, முதல் வர் ஜெயமணி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
dailythanthi thanks
No comments:
Post a Comment