
புதுடெல்லி:இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2012-2013 நிதியாண்டில் மிகமோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய வீழ்ச்சி இதுவென்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.கடந்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாகவே இருந்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் இது 4.8 வீதமாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வரை, இந்தியா தனது பொருளாதார வளர்ச்சியை 9 வீதமாகவே தக்கவைத்து வந்திருக்கிறது.
ஆனால் கடந்த பல மாதங்களாகவே பொருளாதாரத்தில் இந்த இறங்குமுகம் தென்படுகிறது. கட்டுமான, சேவைத் தொழிற்துறைகளில் ஏற்பட்ட மந்தகதியே இந்தியாவின் ஒட்டுமொத்த தேசிய பொருளாதாரத்தின் கடுமையான வீழ்ச்சிக்கும் காரணம் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.புள்ளிவிபரத்துறை அமைச்சகத்தின் தகவல்களின்படி, இந்திய தயாரிப்புத் துறையின் ஆண்டு வளர்ச்சி வீதம் 2.6 ஐ தாண்டவில்லை. அத்தோடு விவசாய- பண்ணை உற்பத்திகள் 1.4 வீதத்தாலேயே வளர்ந்துள்ளன.
எனினும் இந்த குறைந்த பொருளாதார வளர்ச்சி வேகம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியா கடந்த ஆண்டுக்கான அதன் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை 5 வீதமாக குறைத்துக் கொண்டுள்ளதாக கடந்த பெப்ரவரியில் அறிவித்திருந்தது.இந்திய பொருளாதாரத்தின் இந்த இறங்குமுகம் ‘தற்காலிகமானது தான், விரைவில் 8 வீதமாக உயரும்’ என்று பிரதமர் மன்மோகன் சிங் கடந்த மாதம் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
ஆனால், பணவீக்கம் அதிகரித்துவரும் சூழ்நிலையில் இந்திய வர்த்தக சமூகம் பலத்த கவலைகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
thoothuonline thanks
No comments:
Post a Comment