அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday, 2 June 2013

மத்திய அரசுக்கு சொந்தமான எரிவாயு நிறுவனம் அருகே திடீர் தீ; 500 மரங்கள் கருகின எரிவாயு வினியோகம் நிறுத்தப்பட்டதால் விபத்து தவிர்ப்பு


ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே மத்திய அரசுக்கு சொந்தமான எரிவாயு நிறுவனம் அருகே தீப்பிடித்து மரங்கள் கருகின. சுமார் 5 மணிநேர போராட்டத்துக்குபின் தீ அணைக்கப்பட்டது. உடனடியாக எரிவாயு வினியோகம் நிறுத்தப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

எரிவாயு நிறுவனம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் வாலாந்தரவை ஊராட்சிக்குட்பட்ட கிராமம் தெற்குகாட்டூர். இங்கு மத்திய அரசுக்கு சொந்தமான ஓ.என்.ஜி.சி., கெய்ல் எரிவாயு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு கிராம பகுதிகளில் நிலத்துக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயு சேகரிக்கப்பட்டு தரைவழியாக இங்கு குழாய்கள் மூலம் கொண்டுவரப்படுகிறது.
இங்கு எரிவாயு சுத்திகரிக்கப்பட்டு தெற்குகாட்டூர், வழுதூர், கழுகூரணி மின்நிலையங்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்ய குழாய்கள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. 24 மணி நேரமும் எரிவாயு வினியோகம் நடந்து கொண்டே இருக்கும்.
இந்த ஓ.என்.ஜி.சி, கெய்ல் எரிவாயு நிறுவனத்தை சுற்றி உள்ள பனை, தென்னந்தோப்புகள் உள்ளன. இங்கு ஏற்கனவே 2 முறை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. மரங்கள் கருகியதை தவிர பிற சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
வினியோகம் நிறுத்தம்
இந்தநிலையில் 3–வது முறையாக நேற்று காலை 10 மணியளவில் திடீரென தீபிடித்தது. பலத்த காற்று வீசியதால் அருகில் இருந்த பனை, தென்னை மரங்களுக்கு தீ பரவியது. காட்டுத்தீ போல அடுத்தடுத்து தீ பரவியதால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்தது.
தீப்பற்றியதும், உடனடியாக குழாய்களில் எரிவாயு வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தீப்பற்றியது குறித்து வாலாந்தரவை ஊராட்சி துணைத்தலைவர் ராதிகாராஜா, உறுப்பினர் செல்வம் ஆகியோர் கிராமநிர்வாக அலுவலர் பொறுப்பு சைபுதீனுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் தீயணைப்பு படையினர், போலீசார், வருவாய்துறையினர், மாவட்ட வருவாய் அதிகாரி விசுவநாதன், தாசில்தார் கதிரேசன், துணை தாசில்தார் சிவக்குமார், ஆர்.டி.ஓ. சீதாபதி, வருவாய் அலுவலர் தன்ராஜ் ஆகியோர் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
எரிவாயு விநியோகம் நிறுத்தம்
ராமநாதபுரம், மண்டபம், ஏர்வாடி, வழுதூர் மின்நிலையத்தில் இருந்து வந்த 5 தீயணைப்பு வாகனம் மற்றும் உச்சிப்புளி கடற்படை அதிநவீன தீயணைப்பு வாகனம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. 5 மணிநேர போராட்டத்துக்கு பின் தீ அணைக்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட தென்னை, பனை, மாமரங்கள் தீயில் கருகின. உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
தீயின் தாக்கம் இருந்ததால் நேற்று இரவு வரை எரிவாயு வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. முற்றிலும் தீ அணைந்தால் மட்டுமே எரிவாயு வினியோகம் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும் போது, ‘நாள்தோறும் அச்சத்தில் வாழ்ந்து வருகிறோம். இதுகுறித்து பலமுறை நிறுவன பொறுப்பாளர்களிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. 3–வது முறையாக இங்கு தீப்பிடித்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் எரிவாயு நிறுவனத்துக்கு அருகில் உள்ள மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மீண்டும் இதுபோல் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

dailythanthi thanks

No comments:

Post a Comment