அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday, 2 June 2013

ராமநாதபுரம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் ஜவாஹிருல்லா எம்எல்ஏ ஆய்வு

ராமநாதபுரம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் ஜவாஹிருல்லா எம்எல்ஏ ஆய்வு
ராமநாதபுரம், ஜூன் 2-

ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா ராமநாதபுரத்தில் மாவட்ட அரசு மருத்துவமனையில் “திடீர்” ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளையும், பார்வையாளர்களையும் அங்கு பணி புரியும் அதிகாரிகளையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.


முன்னதாக மருத்துவ மனைக்கு சென்ற எம்.எல்.ஏ.வை இணை இயக்குநர் மீனாட்சி சுந்தரம், நிலைய மருத்துவ அதிகாரி சகாய ஸ்டீபன் ராஜ் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு, உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவு, நவீன எக்ஸ்ரே பிரிவு மற்றும் சி.டி.ஸ்கேன் பிரிவு, நரம்பியல் பிரிவு ஆகியவற்றையும் பார்வையிட்டார்.

அங்குள்ள கழிப்பறையில் காணப்படும் குறைகள் மற்றும் கழிவுநீர் தேங்குவது குறித்த குறை பாடுகள், தேவைகள் சீர் செய்யப்பட வேண்டியது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இணை இயக்குநர் மீனாட்சி சுந்தரம், நிலைய கண்காணிப்பாளர் சகாய ஸ்டீபன்ராஜ் ஆகியோருடன் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார்.

அப்போது இணை இயக்குநர் இம்மருத்தவமனையை தரம் உயர்த்தும் வகையில் விரைவில் உள் நோயாளிகள் பிரிவில் பொதுவான படுக்கைகள் 100-ம், மனநோய் பிரிவில் கூடுதலாக 50 படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார். த.மு.மு.க. மாவட்ட செயலாளர் அன்வர் அலி, மாவட்ட பொருளாளர் வாணி சித்தீக், ராமநாதபுரம் ஒன்றிய, நகர நிர்வாகிகள் பாகர் அலி, பசீர் அகமது, அகமது இப்ராஹிம், பரக்கத்தல்லா, பிஸ்மி (எ) நசுருதீன், ஜஹாங்கீர் அலி, அப்துல் ரஸ்மான் உள்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

maalaimalar thanks

No comments:

Post a Comment