அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 17 June 2013

மலேசியாவில் கொத்தடிமை: 6 பேரை மீட்டுத் தர ஆட்சியரிடம் கோரிக்கை


First Published : 18 June 2013 
மலேசியாவில் கொத்தடிமைகளாக வசிக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேரை மீட்டுத் தருமாறு ஆட்சியர் நந்தகுமாரிடம் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

  இதுகுறித்து ஆட்சியரிடம் உறவினர்கள் திங்கள்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
  ராமநாதபுரம் சக்கரக்கோட்டையைச் சேர்ந்த சீனி ஆசாத் அலி, மஞ்சூரைச் சேர்ந்த ஆனந்தராஜ், ரெகுநாதபுரத்தைச் சேர்ந்த பழனிகுமார், எமனேசுவரத்தைச் சேர்ந்த முகம்மது நிஸ்தார், தினைக்குளத்தைச் சேர்ந்த அசாருதீன், பைசான் அலி ஆகியோர் மலேசியாவில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வருகின்றனர்.
   இவர்களை உணவக உரிமையாளர் ஜகுபர்அலி மகன் ஷெரீப் 15 மணி நேரம் வேலை செய்ய வைக்கிறார். சரியான உணவு, தூக்கமின்றி வேலை வாங்கி வருகிறார்.
மேலும் உடல்நிலை சரியில்லை என்றாலும், விடுமுறை அளிக்க மறுக்கிறார். சம்பளத்தை முறையாகத் தராமலும், இந்தியாவுக்கு திருப்பி அனுப்பாமலும் கொத்தடிமைகளாக அடைத்து வைத்து வேலை வாங்கி வருகிறார்.
  இவர்கள் உணவகத்தில் இருந்து தப்பித்து கடந்த 11 ஆம் தேதி இந்திய தூதரகத்தில் முறையிட்டுள்ளனர். 
   எனவே, 6 இளைஞர்களையும் இந்தியா திரும்புவதற்கான நடவடிக்கை எடுத்து எங்களது குடும்பங்களை காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளனர்.

news dinamani thanks

No comments:

Post a Comment