ராமநாதபுரம்
First Published : 18 June 2013 12:39 AM IST
ராமநாதபுரம் அருகே சித்தார்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் இருளேஷ்குமார் (23). இவரும், புருஷோத்தமன் என்பவம் இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை ராமநாதபுரம் வந்துள்ளனர். சித்தார்கோட்டை மெயின் ரோட்டில் வரும்போது எதிரே வந்த டிராக்டர் மோதியது. இதில் இருளேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
புருஷோத்தமன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
தேவிபட்டினம் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப் பதிவு செய்து டிராக்டர் டிரைவர் குணநிதியை கைது செய்தனர்.
news dinamani thanks
No comments:
Post a Comment