அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday, 2 June 2013

திறந்த வெளியில் ஆட்டிறைச்சி விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.7,750 அபராதம்



நாமக்கல் நகரிலுள்ள இறைச்சிக் கடைகளில் திறந்த வெளியில் ஆடுகளை வெட்டுவதால் ஏற்படக்கூடிய சுகாதார பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில், நகராட்சி நிர்வாகம் சார்பில் உழவர் சந்தை அருகே ஆடுவதைக் கூடம் கட்டப்பட்டுள்ளது

இங்கு கட்டண அடிப்படையில் ஆடுகளை மருத்துவப் பரிசோதனை செய்து சுகாதாரமான முறையில் வெட்டி முத்திரையிட்டு அளிக்கப்படுகிறது. நகரில் இறைச்சிக் கடை நடத்துவோர் ஆடுகளை இந்த ஆடுவதைக் கூடத்துக்குக் கொண்டு வந்து மருத்துவப் பரிசோதனை செய்து வெட்டி எடுத்துச் செல்ல வேண்டும் என நகராட்சி நிர்வாகம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. 
ஆனால், நகராட்சியின் விதிமுறைகளைப் பின்பற்றாமல் ஆட்டு இறைச்சிக் கடை உரிமையாளர்கள் வழக்கம்போல, தாங்களின் கடைக்கு முன்பாகவே திறந்த வெளியிலேயே ஆடுகளை வெட்டி விற்பனை செய்து வருகின்றனர். 
இதனால், ஏற்படும் சுகாதார பாதிப்புகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கமலநாதன் உத்தரவின் பேரில், சுகாதார ஆய்வாளர்கள் சண்முகவேல், சின்னதுரை, உதயகுமார் உள்ளிட்ட குழுவினர் நகராட்சிப் பகுதியிலுள்ள சுமார் 57 இறைச்சிக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, சேந்தமங்கலம் சாலை, கோட்டை சாலை, ஏஎஸ் பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள 12 கடைகளில் நகராட்சி ஆடுவதைக் கூட முத்திரை இல்லாத இறைச்சி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டுபிடித்த அலுவலர்கள் அந்தக் கடைகளுக்கு 7,750 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், அந்தப் பகுதி கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 12 கிலோ பழைய இறைச்சியையும் அவர்கள் பறிமுதல் செய்து அழித்தனர்.

nakkheeran thanks

No comments:

Post a Comment