
June 3, 2013 09:17 am
நைஜீரியாவில் இருந்து இளம்பெண்களை கடத்திவந்து ஸ்பெயின் நாட்டில் உள்ள பெனின் நகர சாலையோரங்களில் விபசாரத்தில் ஈடுபடுத்திய ஒரு பெண் உள்பட ஆறு பேரை ஸ்பெயின் பொலிசார் கைது செய்துள்ளனர்.
வறுமை நிலையில் இருக்கும் இளம்பெண்களை நைஜீரியாவில் இருந்து கடத்திவரும் விபசார தரகர்கள், மொரக்கோ நாட்டிற்கு அழைத்து வருகின்றனர்.
பின்னர், கள்ளத் தோணியில் ஏற்றி ஸ்பெயின் நாட்டுக்குள் கடத்தி வந்து மாட்ரிட்,பார்செலோனா, மலாகா போன்ற முக்கிய நகரங்களின் சாலையோரங்களில் அந்த பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துகின்றனர்.
இதற்கு உடன்படாத பெண்களை அடித்தும், இரும்பு கம்பியால் சூடு போட்டும் சித்ரவதைபடுத்தி இந்த தரகர்கள் பிழைப்பை நடத்திக்கொண்டுள்ளனர்.
நைஜீரியாவில் இருந்து இந்த பெண்களை அழைத்து வருவதற்கு முன்னர், அவர்களது குடும்ப கோயில்களில் நிறுத்தி, ´உங்களை பொலிசில் காட்டிக்கொடுக்க மாட்டோம்´ என்று தரகர்கள் சத்தியம் வாங்கிக் கொள்கின்றனர்.
அதுமட்டுமின்றி, பில்லி, சூனியம், பேய், பிசாசு போன்ற மூடத்தனங்களில் அதீத நம்பிக்கையுள்ள பெண்களின் நகம், தலைமுடி, உள்ளாடை ஆகியவற்றையும் உள்ளூர் மந்திரவாதியிடம் அவர்கள் ஒப்படைக்கின்றனர்.
´எங்கள் பிடியில் இருந்து தப்பியோடுபவர்களை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சூனியம் வைத்துக் கொன்று விடுவோம்´என்று மிரட்டியே இவர்கள் காரியத்தை சாதித்துக் கொள்கின்றனர்.
இவர்கள் பிடியிலிருந்து நழுவிவந்த இளம்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒரு பெண் உள்பட 6 நைஜீரிய ஆசாமிகளை பொலிசார் கைது செய்தனர்.
thamilan thanks
No comments:
Post a Comment