11 Jun 2013

புதுடெல்லி:தனது விருப்பத்துக்கு மாறாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு கட்சியின் தேர்தல் பிரசாரக் குழு தலைவர் பொறுப்பை வழங்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பா.ஜ.கவின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி அக்கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமாச் செய்துள்ளார்.
பா.ஜ.கவின் நிறுவன உறுப்பினரான 85 வயது அத்வானி, அக்கட்சியின் வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை ஆற்றியவர். ரத யாத்திரை என்ற பெயரால் வன்முறையை உருவாக்கிய ரத்த யாத்திரையின் மூலம் சிறுபான்மை மக்களின் உயிரை காவுக்கொண்டும், இறையில்லமும், இந்தியாவின் வரலாற்றுச் சின்னமுமான பாபரி மஸ்ஜித் இடிப்பில் பங்கேற்றும் தனது ஹிந்துத்துவா விசுவாசத்தை காட்டியவர் அத்வானி. முன்னாள் பிரதமர் வாஜ்பேய்க்கு அடுத்து கட்சியின் முதுபெரும் தலைவராக மதிக்கப்பட்டார். அதேவேளையில் அத்வானியுடன் போட்டி போடும் அளவுக்கு தீவிர ஹிந்துத்துவத்தில் ஊறி, இந்திய வரலாறு காணாத 2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலைகளை நிகழ்த்தியவர் நரேந்திரமோடி.குஜராத் மாநிலத்தில் ஹிந்துத்துவா வெறியை ஊட்டி, வளர்ச்சி நாயகனாக வேடம் பூண்டு தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள மோடி, பிரதமர் கனவில் மூழ்கி வந்தார். இதற்கான காய்நகர்த்தல்களை துவக்கிய மோடி, தனது எதிர்ப்பாளர்களையெல்லாம் சரிகட்டியும், வலுவிழக்கச் செய்தும் கட்சியில் இன்று முக்கிய பதவியை அடைந்துள்ளார். மோடிக்கு இவ்வாறு கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதையும், தான் செல்லாக்காசாக மாறுவதையும் அத்வானி விரும்பவில்லை.
இந்நிலையில் கோவாவில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தை அத்வானி புறக்கணித்த நிலையில், அக்கூட்டத்தில் மோடிக்கு தேர்தல் பிரசாரக் குழு தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து கட்சிப் பதவிகளை அத்வானி ராஜிநாமா செய்துள்ளார். கட்சியின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர், தேசிய செயற்குழு உறுப்பினர், தேர்தல் குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் இருந்து அத்வானி விலகியுள்ளார். தனது ராஜிநாமா கடிதத்தை கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் கோவாவில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தை அத்வானி புறக்கணித்த நிலையில், அக்கூட்டத்தில் மோடிக்கு தேர்தல் பிரசாரக் குழு தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து கட்சிப் பதவிகளை அத்வானி ராஜிநாமா செய்துள்ளார். கட்சியின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர், தேசிய செயற்குழு உறுப்பினர், தேர்தல் குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் இருந்து அத்வானி விலகியுள்ளார். தனது ராஜிநாமா கடிதத்தை கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு அனுப்பியுள்ளார்.
கடிதத்தில் அத்வானி கூறியிருப்பது: கட்சியை உருவாக்கிய சியாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாய, நானாஜி தேஷ்முக், வாஜ்பாய் ஆகியோர் வகுத்தளித்த கொள்கைகளின்படி இனிமேலும் கட்சி செயல்பட முடியாது என்றே தோன்றுகிறது. சில சமயங்களில் கட்சியின் செயல்பாட்டை பார்க்கும்போது அது சரியான பாதையில்தான் செல்கிறதா என்கிற சந்தேகம் எழுகிறது. மேலும் கட்சியில் உள்ள பல தலைவர்கள் தங்கள் தனிப்பட்ட நலன்களில் அதிக அக்கறை செலுத்தத் தொடங்கிவிட்டனர். எனது வாழ்க்கை முழுவதும் ஜன சங்கத்துக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் பணியாற்றியுள்ளேன். இதனை மிகப்பெரிய பெருமையாகக் கருதுகிறேன். இப்பணி எனக்கு முழு திருப்தியை அளித்துள்ளது என்று அத்வானி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கட்சி இப்போது தவறான பாதையில் செல்கிறது என்ற தனது கருத்தை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ள அத்வானி, “இதனால் கட்சியில் நான் வகித்து வரும் மூன்று முக்கிய பதவிகளான ஆட்சி மன்றக்குழு உறுப்பினர், தேசிய செயற்குழு உறுப்பினர், தேர்தல் குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். இதனை எனது ராஜிநாமா கடிதமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று அத்வானி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
மூன்று பதவிகளை ராஜிநாமா செய்துள்ளபோதிலும் பாஜகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல் தலைவராகவும் அத்வானி தொடர்கிறார். அத்வானியின் ராஜிநாமாவை கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் ஏற்றுக் கொள்ளவில்லை. கட்சியின் பிற தலைவர்களான வெங்கய்ய நாயுடு, அனந்த் குமார், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் மேற்கொண்ட சமாதான முயற்சிகளும் பயனளிக்கவில்லை. எனினும், அத்வானியை சமாதானப்படுத்தி கட்சிப் பதவிகளில் தொடரச் செய்வதற்கான முயற்சியில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ராஜ்நாத் சிங், நரேந்திர மோடியுடன் சென்று அத்வானியை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், “மோடி வரக் கூடாது; நீங்கள் மட்டும் வரலாம்’ என்று அத்வானி, ராஜ்நாத் சிங்குக்கு தகவல் அனுப்பினார். இதையடுத்து ராஜ்நாத் சிங் மட்டும் அத்வானியை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் திங்கள்கிழமை, சந்தித்தார். அப்போது தனது எதிர்ப்பை மீறி மோடிக்கு பதவி வழங்கப்பட்டது குறித்த தனது கோபத்தையும், அதிருப்தியையும் அவரிடம் வெளிப்படுத்தினார். ராஜிநாமா முடிவை திரும்பப் பெறுமாறு ராஜ்நாத் சிங் விடுத்த கோரிக்கையையும் அத்வானி நிராகரித்துவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அத்வானியின் இந்த முடிவு பாஜகவுக்கு கட்சி ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜகவில் உள்கட்சி பூசல் வலுத்துள்ளது கட்சித் தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவாவில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் அத்வானி பங்கேற்கவில்லை. பாஜக வரலாற்றில் அவர் பங்கேற்காமல் நடந்த முதல் தேசிய செயற்குழு கூட்டம் இதுதான்.
நரேந்திர மோடிக்கு பதவி அளிப்பதை அத்வானி விரும்பவில்லை என்பது அப்போதே தெரியவந்தது. ஆனால் உடல் நிலை சரியில்லாததால் அவர் பங்கேற்கவில்லை என்று பாஜக தலைவர்கள் மழுப்பலான பதிலை தெரிவித்தனர். அதேவேளையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்துடன் பா.ஜ.க தலைவர் ராஜ்நாத் சிங் அத்வானி ராஜினாமா விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.அப்பொழுது,கோவா தேசிய செயற்குழு கூட்டத்தில் எடுத்த முடிவுகளில் மாற்றம் ஏற்படுத்தக்கூடாது என்று மோகன் பாகவத் ராஜ்நாத் சிங்கிற்கு உத்தரவிட்டுள்ளார்.
thoothuonline thanks
No comments:
Post a Comment