அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday 26 June 2013

சிங்கப்பூர், மலேசியாவிடம் மன்னிப்புக் கோரினார் இந்தோனேசிய ஜனாதிபதி!

சிங்கப்பூர், மலேசியாவிடம் மன்னிப்புக் கோரினார் இந்தோனேசிய ஜனாதிபதி!
June 26, 2013  10:59 am
சுமத்ரா தீவு காட்டுத் தீயால் சிங்கப்பூர்மலேசியாவில் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக,இந்தோனேசிய ஜனாதிபதி சுசிலோ பாம்பாங் யுதோயோனோ மன்னிப்பு கோரியுள்ளார்.


இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் மரங்கள் எரிந்து நாசமானது. இந்த காட்டுத்தீயால் அண்டை நாடுகளான சிங்கப்பூர்மலேசியாவுக்கும் கடும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.காட்டுத்தீயால் உருவான கடும் புகை முதலில் இந்தோனேஷியாவின் அண்டை நாடான சிங்கப்பூரைச் சூழ்ந்தது. 

கடும் பனிமூட்டம் ஏற்பட்டதை போன்று பல நகரங்களில் புகை சூழ்ந்தது. சுத்தமான காற்றுக்காக சுவாச முகமூடிகளை அணிந்து மக்கள் நடமாடினர். இதனால் கடைகளில் முகமூடிகள் விற்று தீர்ந்தன. அடுத்ததாககாற்றின் போக்கினால் சிங்கப்பூரைத் தொடர்ந்து,மலேசியாவின் முவா,லெடாங்கில் புகைமூட்டம் சூழ்ந்தது. 

அங்கிருந்து கோலாலம்பூர் என்று பல்வேறு நகரங்களுக்கு அது பயணிக்க ஆரம்பித்தது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜோஹர்மலாக்கா நகரங்களில் நேற்று முன்தினம் மூச்சுத்திணறல் பாதிப்பால் ஏராளமான மக்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். 

காட்டுத்தீ புகைமூட்டத்தை கட்டுப்படுத்த இந்தோனேசியா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சிங்கப்பூர் குற்றம்சாட்டிய நிலையில் இந்தோனேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் கூறுகையில்சிங்கப்பூர் இந்த விஷயத்தில் சிறுபிள்ளைத்தனமாக குற்றம்சாட்டுகிறது என்றார். இந்நிலையில்,இந்தோனேசிய அதிபர் சுசிலோ பாம்பாங் யுதோயோனோ மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்காட்டுத்தீ புகைமூட்டத்தால் சிங்கப்பூர்மலேசியாவில் ஏற்பட்ட பாதிப்புக்காகஇந்தோனேசிய அதிபர் என்ற முறையில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த பிரச்னையை கையாள்வதில் எங்களுக்குள்ள பொறுப்பை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார். 

சுமத்ரா தீவில் ஜூன் முதல் செப்டம்பர் வரையில் வறட்சியான காலநிலை இருக்கும். இந்த நேரத்தில் தங்களுடைய நிலத்தை விவசாயத்துக்கு ஏற்றபடி மாற்றுவதற்காக,வயல்களில் தீ வைப்பது அங்குள்ள மக்களின் வழக்கம். இதுபோன்று வைக்கப்பட்ட தீயால்தான் சுமத்ரா தீவில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க செயற்கை மழைவிமானத்தில் இருந்து ரசாயனங்களை தூவுதல் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை இந்தோனேசிய அரசு கையாண்டு வருகிறது. ஆனால்,இதுவரை தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

thamilan. thanks

No comments:

Post a Comment