அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday 28 June 2013

சிங்கப்பூரின் கவனத்தில் மூன்று முக்கிய அம்சங்கள்



Saturday, June 29th, 2013
சிங்கப்பூரின் கவனத்தில் மூன்று முக்கிய அம்சங்கள்
சிங்கப்பூரின் சட்ட அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான கா. சண்முகம். படம்: எஸ்டி
புகைமூட்டம் தொடர்பாக சிங்கப் பூர் கவனம் செலுத்த இருக்கும் மூன்று முக்கிய அம்சங்களை வெளியுறவு அமைச்சர் சண்முகம் பட்டியலிட்டு உள்ளார். இந்தோனீசியாவில் தீச் சம்பவங்களை முறியடிப்பதும் புதிய தீச்சம்பவம் ஏதும் நிகழாமல் இருப்பதை உறுதிச் செய்வதும் இந்த அம்சங்களில் தலையாயது. வார இறுதியில் ஆசியான் அமைச்சர்நிலைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக புருணை செல்ல இருக்கும் வேளையில் அமைச்சர் சண்முகம் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனத்திற்கு அவர் வழங்கிய நேர்காணல் நேற்று ஒளிபரப்பானது. சில நாட்களாகப் புகைமூட் டம் தணிந்துள்ளபோதிலும் மலேசியா மற்றும் இந்தோனீசியாவின் சில பகுதிகளில் நெருக்கடி நீடிக்கின்றன. அத்துடன் காற்று திசை மாறி வீசும்போது நாம் மீண்டும் பாதிப்புக்குள்ளாவோம் என்றார் அவர்.
புகைமூட்டம் தொடர்பாக இந்த வாரத்தில் அரசியல் முதிர்ச்சிக்குரிய வகையில் இந்தோனீசிய அதிபர் சுசிலோ பம்பாங் யுதயோ னோவின் மன்னிப்பு அறிக்கை இவ்விஷயத்தில் மிகவும் உதவக் கூடும் என்றார் திரு சண்முகம். டாக்டர் யுதயோனோவின் அறிக்கை அவரது அதிகாரி களுக்குத் தெளிவான விளக் கத்தைக் கொடுத்ததோடு தீயைச் சமாளிக்கும் வளங்களில் கணிச மான அதிகரிப்பையும் அது உணர்த்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சிங்கப்பூரும் மலேசியாவும் கூட உதவிக்குத் தயார் என்று அறிவித்துள்ளதாகக் கூறினார்.

tamilmurasu. thanks

No comments:

Post a Comment