Saturday, June 29th, 2013

கேரளாவின் முண்டேரிக்கு அருகில் உள்ள கானாச்சேரியில் ஒரு சுவர் இடிந்து விழுந்ததால் சேதமடைந்த ஒரு வீடு. படம்: தகவல் சாதனம்
நேற்று முன்தினம் வரை கேரளா முழுவதும் 93 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது. வழக்கமாக தென்மேற்குப் பருவமழை காலத்தில் சராசரியாக 51 செ.மீ. மழை தான் பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு கூடுதலாக 42 செ.மீ. மழை பெய்துள்ளது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் தற்போதுதான் இந்த அளவுக்குக் கனமழை பெய்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 1991ம் ஆண்டு கேரளாவில் இதேபோல கனமழை கொட்டியது. தற்போது பெய்து வரும் பருவமழையின் வேகம் இன்னும் இரண்டு நாட்களில் குறையும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுவரை பெய்த மழையில் கேரளா முழுவதும் 1,829 வீடுகள் இடிந்து விழுந்து உள்ளன.
tamilmurasu thanks
No comments:
Post a Comment