வங்கதேசத்தில் நடந்த வேலைநிறுத்தம் ஒன்றில் பயங்கர வன்முறை வெடித்ததால் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த 1971-ம் ஆண்டு சுதந்திர போராட்டத்தின் போது, போர்க்குற்றங்கள் புரிந்ததாக ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் தலைவர்கள் சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த அமைப்பு சார்பில் அவ்வப்போது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
இதற்கிடையே போர்க்குற்ற விசாரணை தொடர்பாக அவதூறாக பேசியதாக ஜமாத் தலைவர்கள் இரண்டு பேருக்கு மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு சார்பில் திங்கள்கிழமை நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெற்றது.
இதில் டாக்காவின் ஷாபாக் சதுக்கத்தில் மர்ம நபர்கள் கையெறி குண்டுகளை வீசி விட்டு தப்பினர். இதில் எவரும் காயமடையவில்லை. பல்வேறு நகரங்களில் கடைகள், பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. முக்கிய சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. போலீஸôருக்கும், ஜமாத் தொண்டர்களுக்கும் இடையே மோதல் மூண்டது.
ஆதரவு தரவில்லை: இதற்கிடையே வங்கதேச எதிர்க்கட்சியான தேசிய கட்சி பொது வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தரவில்லை என அக்கட்சித் தலைவர் ஷம்சுஸ்மான் டூடு தெரிவித்துள்ளார்.
thedipaar thanks
No comments:
Post a Comment