அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday 26 June 2013

நீலகிரியில் கனமழையால் மலை ரயில் நிறுத்தம்! பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!!

  [புதன் - 26 ஜூன்-2013 - 
நீலகிரியில் கனமழை தொடர்வதால் மலை ரயில் நிறுத்தப்பட்டுள்ளதுடன், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 955 மி.மீ. மழை பெய்துள்ளது. கனமழை நீடித்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பின் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை குறித்த காலத்தில் தொடங்கியதையடுத்து பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் குறிப்பாக கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் கபினி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கூடலூரில் வீடுகள் சேதம் கூடலூர் பகுதியில் கடந்த மூன்று தினங்களாக மழைப்பொழிவு அதிகமாக இருப்பதால், கூடலூரை அடுத்த 2-ஆவது மைல் பகுதிக்கு உள்பட்ட தட்டக்கொல்லி குடியிருப்புப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 30 வீடுகள் சேதமடைந்தன.
.தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதியில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 955 மி.மீ. மழை பதிவாகியுள்ளது இதைத்தொடர்ந்து, வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையால் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு அபாயம் இருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மலை ரயில் நிறுத்தம் மழையினால் சாலைகள் சேதமடைந்துள்ளன. மலை ரயில் பாதையில் லாரி கவிழ்ந்துள்ளதால் இன்று காலை முதல் உதகமண்டலம் மழை ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை நீர்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் முக்காலி, பரணி, முல்லி வன நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நீர் அவலாஞ்சி, எமரால்டு நீர்த்தேக்கங்களில் கலந்துவிடுவதால், நீர்வரத்து அதிகரித்து நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

tamilantelevision thanks

No comments:

Post a Comment