அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 11 June 2013

உலக நாடுகளில் செல்வந்தர்கள் அதிகமுள்ள நாடு கத்தார்

[ செவ்வாய்க்கிழமை, 11 யூன் 2013, 
எண்ணெய் வளம் கொழிக்கும் கத்தார் நாட்டிலேயே 14.3 சதவிகிதத்தினர் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கையின் படி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இவ் ஆய்வறிக்கையின்படி கத்தாரில் உள்ள ஒவ்வொரு ஆயிரம் பேரிலும் 143 பேர் ஒரு கோடிக்கும் அதிகமான சொத்துடையவர்களாக இருகின்றனர் எனவும் இதுவே உலக நாடுகளின் செல்வந்தர்களின் சதவிகிதத்தை விட அதிகமானதாகவும் தெரிவித்துள்ளன.
மற்றைய அரபு நாடுகளில் குவைத்-11.5 சதவிகிதத்துடன் மூன்றாவது இடத்திலும் பஹ்ரைன்-4.9 சதவிகிதத்துடன் ஏழாவது இடத்திலும் ஐக்கிய அரபுக் குடியரசு-4 சதவிகிதத்துடன் ஒன்பதாவது இடத்தையும் பிடிப்பதாக பாஸ்டன் ஆலோசனைக் குழுவின் 13-ம் ஆண்டு ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
கடந்த 2012ஆம் ஆண்டில், மத்தியக் கிழக்கு நாடுகளிலும், ஆப்பிரிக்காவிலும் செல்வந்தர்களின் வளர்ச்சி விகிதம் 9.1 என்ற சதவிகிதத்தில் இரு மடங்கு ஆகியுள்ளது.
2017ஆம் ஆண்டிற்குள், இந்த இரு நாடுகளின் தனியார் சொத்து மதிப்பானது 6.5 டிரில்லியன் டாலர் என்ற அளவை எட்டக்கூடும் எனவும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கப் போவது எண்ணெய் வளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தித் திறனாகும் என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
பாஸ்டன் ஆலோசனைக் குழுவானது உலக அளவில் வியாபார உத்திகளுக்கும் மற்றும் நிர்வாக மேம்பாட்டிற்கும் ஆலோசனை மையமாகச் செயல்பட்டு வருகின்றது.
newsonews. thanks

No comments:

Post a Comment