அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 11 June 2013

பெண்கள் செல்போன் மற்றும் ஜீன்ஸ் உபயோகிக்க தடை


[ செவ்வாய்க்கிழமை, 11 யூன் 2013,
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க வேண்டுமானால் பெண்கள் திருமணத்திற்கு முன் மொபைல் போன் பயன்படுத்தவும், ஜீன்ஸ் அணியவும் அணுமதிக்கக் கூடாது என மத்திய பிரதேச பா.ஜ. துணை தலைவரும் ராஜ்யசபா எம்.பி.,யுமான ரகுநந்தன் சர்மா தெரிவித்துள்ளார்.
பா.ஜ., எம்.பி., கருத்து: மத்திய பிரதேசத்தின் ரட்லம் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய போது ரகுநந்தன் தனது கருத்தை தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், மாணவர்கள் குறிப்பாக இளம்பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதாலேயே பெரும்பாலான அச்சுறுத்தல்களும், குற்றங்களும் நடைபெறுவதாக தெரிவித்தார்.
இளம்பெண்கள் ஜீன்ஸ் அணிவது அமெரிக்க கவ்பாய் தோற்றத்தை ஏற்படுத்துகிறது, இது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது, ஏற்புடையதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். தனது இந்த கருத்தை தனி மனித நோக்கில் இருந்தே தெரிவிப்பதாகவும், பா.ஜ.,வின் கொள்கையின் அடிப்படையில் தெரிவிக்கவில்லை எனவும் ரகுநந்தன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எதிர்ப்பு: பா.ஜ., எம்.பி. ரகுநந்தனின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் மற்றம் தேசிய மகளிர் ஆணையம் ஆகியன எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து தேசிய மகளிர் ஆணைய தலைவி மம்தா சர்மா கூறுகையில், பெண்கள் இன்னும் பழங்காலத்தை போன்றே இருக்க வேண்டும் என இந்த அரசியல்வாதி விரும்புவதாகவும், இவரது இந்த கருத்து அனைத்து பெண்கள் மத்தியிலும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
ரகுநந்தனின் இந்த கருத்திற்காக அவரும், பா.ஜ.,வும் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து காங்கிரஸ் தெருவிக்கையில், ரகுநந்தனின் இந்த கருத்து மத்திய பிரதேசத்தில் ஆளும் பா.ஜ., கட்சியிடையே இரட்டை நிலைப்பாடு உள்ளது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபனம் ஆகி உள்ளது.
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவான் பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். ஆனால் கட்சியின் மூத்த தலைவர்களான விஜய் ஷா, பாபுலால் கவுர், கைலாஷ் விஜய்வர்கியா, ரகுநந்தன் சர்மா உள்ளிட்டோர் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
ரகுநந்தனின் பெண்களுக்கு எதிரான இந்த கருத்திற்கு அவர் மட்டுமல்ல பா.ஜ.,வும் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நரேந்திர சிங் சலுஜா தெரிவித்துள்ளார்.


newindianews thanks

No comments:

Post a Comment