அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 3 June 2013

தகவல் அறியும் உரிமை சட்ட வரம்பில் அரசியல் கட்சிகள்: இந்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு

தகவல் அறியும் உரிமை சட்ட வரம்பில் அரசியல் கட்சிகள்: இந்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு
புதுடெல்லி, ஜூன் 3-

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி எந்த ஒரு அரசுத்துறை அதிகாரியிடம் இருந்தும், பொதுமக்கள் தகவல்களைக் கேட்டுப் பெறலாம்.
இதன்மூலம் உள்ளூரில் நடைபெற்று வரும் அரசுத் திட்டப் பணிகள், எம்.பி. நிதி மற்றும் எம்.எல்.ஏ. நிதியில் நமது பகுதிகளில் செயல்படுத்தப்பட்ட திட்டப்பணிகள் உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து தகவல்கள் பெற முடியும்.

அந்த வகையில், தகவல் ஆணைய சேவையின் புதிய மைல்கல்லாக, தகவல் அறியும் உரிமை சட்டம் இனி அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும் என்று இந்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

எனவே, அரசியல் கட்சிகளிடம் இருந்து இனி எழுத்துப்பூர்வமாக எந்த ஆவணத்தையும் கேட்டுப் பெற முடியும். கட்சிகள் வாங்கிய நன்கொடைகள், செலவு மற்றும் வேட்பாளர்கள் தேர்வு பற்றிய விவரங்களையும் மக்கள் அறிந்துகொள்ள முடியும்.

அரசியல் கட்சிகளையும் தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும் என்று, சமூக ஆர்வலரும் மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன், தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் சுபாஷ் அகர்வால் மற்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி மனு அளித்தனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தகவல் ஆணையம் இப்போது அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
maalaimalar thanks

No comments:

Post a Comment