
June 1, 2013 01:53 pm
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒக்லஹோமா நகரை சூறாவளி புயல் தாக்கியது. இதில் 24 பேர் பலியாகினர். இதில் இருந்து மீள்வதற்குள் ஒக்லஹோமா நகரை நேற்று மீண்டும் சூறாவளி புயல் தாக்கியது.
இதனால் ஒக்லஹோமா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் தூக்கி வீசப்பட்டன. புறநகர் பகுதியான கேசினோவில் வீட்டு கூரைகள் காற்றில் பறந்தன.
தகவல் தொடர்பு மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டன. இதனால் மக்கள் இருளில் தவித்தனர். சூறாவளி புயலுடன் பலத்த மழையும் கொட்டியது.
இதனால் சாலைகளில் சுமார் 4 அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒக்லஹோமா நகரில் வீசும் சூறாவளி புயலில் சிக்கி இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் ஒரு தாயும், ஒரு குழந்தையும் அடங்குவர்.
thamilan thanks
No comments:
Post a Comment