SATURDAY, 06 JULY 2013 00:53

எகிப்தில், பதவி விலக்கபப்ட்ட மொஹமது மோர்சியின் ஆதரவாளர்களுக்கும், எதிரானவர்களுக்கும் இடையில் நேற்று திடீரென கலவரம் மூண்டதில் 10 பேர் கொல்லப்பட்டதுடன் 200 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கடந்த நான்கு நாட்களாக தஹ்ரீர் சதுக்கத்தில் மோர்ஸிக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள நடைபெற்றதை அடுத்து ஆட்சிக்கவிழ்ப்பை மேற்கொண்ட எகிப்திய இராணுவம், இராணுவ புரட்சி மூலம் இடைக்கால அதிபரை நியமித்தது. எகிப்தில் முபாரக்கின் வீழ்ச்சிக்கு பிறகு இடம்பெற்ற முதலாவது ஜனநாயக முறையிலான தேர்தல் மூலம் மோர்சி தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் அவரது வெளியுறவுக்கொள்கைகள், ஆட்சிநடைமுறைகளுக்கு மீண்டும் எகிப்திய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனினும் முன்னாள் அதிபர் முபாரக்கிற்கு எதிரான கிளர்ச்சியின் போது மோர்ஸியின் இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சி கிளர்ச்சியாளர்களுக்கு பெரும் ஆதரவு கொடுத்ததால் மோர்ஸிக்கு ஆதரவான ஒரு சாராரும் அங்கு உள்ளனர்.
இந்நிலையில் மோர்ஸியை அதிரடியாக பதவிநீக்கம் செய்து இராணுவப்புரட்சி மேற்கொண்டது இராணுவத்தின் தவறு என மோர்ஸிக்கு ஆதரவானவர்கள் நேற்று தஹ்ரீர் சதுக்கத்தை முற்றுகையிட்டு, கிளர்ச்சியாளர்களுடன் மோதினர். இதன் போது துப்பாக்கிச்சூடு, கல்லெறிந்து தாக்குதல் என்பன இடம்பெற்றுள்ளதுடன், 10 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

4tamilmedia thanks
No comments:
Post a Comment