- SATURDAY, 06 JULY 2013 10:23

எஞ்சின் டிரைவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் தர்மபுரியில் காதல் ஜோடி ஒன்று கலப்புத் திருமணம் செய்து கொண்டனர் என்றும், பெண்ணின் தந்தை துக்கம், அவமானம் தாளாமல் தற்கொலை செய்து கொண்டார் என்றும் தகவல்கள் வெளியாகி தர்மபுரியையே கலவர பூமியாக்கி, அங்கு 144 தடை உத்தரவு போடும் அளவுக்கு, ஜோடியின் காதல் திருமணம் பிரச்சனைகளை கிளப்பியது.
இந்நிலையில், தலித் இளைஞனான இளவரசனை காதல் திருமணம் செய்து கொண்ட திவ்யா, தனது தாயுடன் சென்று விட்டார். தனக்கு, தந்தையின் பேரிழப்பு அடிக்கடி நினைவுக்கு வருகிறது என்றும், அதோடு ஊரில் நடந்த கலவரமும் வாட்டி வதைக்கிறது என்றும் கூறிய திவ்யா, இளவரசனுடன் தன்னால் இனி நிம்மதியாக வாழ முடியாது என்றும் கூறிவிட்டு, தாயுடன் சென்று விட்டார்.
இதற்கு அடுத்த நாளான நேற்றைய முன்தினம் இளவரசன் தர்மபுரியில் ரயில் தண்டவாளம் அருகே பிணமாக் கிடந்துள்ளார். இது கொலையா, தற்கொலையா என்று சந்தேகம் வந்த நிலையில் இளவரசனின் பிரேத பரிசோதனை செய்யப்பட போதும், இளவரசனின் உடலை பாதுகாத்து வைக்க வேண்டும் என்றும், தேவைப்பாட்டால் மீண்டும் பரிசோதனை செய்ய இளவரசன் உடல் வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், தருமபுரி அரசு கல்லூரியின் பின்புறம் உள்ள ரயில் தண்டவாளம் அருகில் அப்போது அந்த வழியாக கோவையில் இருந்து மும்பை செல்லும் குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் வந்துள்ளது. அதில் இளவரசன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.
இளவரசன் ரயில் பாதையில் அமர்ந்து இருப்பதையும், பின்னர் அவர் தண்டவாளத்தில் தலையை கொடுக்க முயன்றதையும் குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் எஞ்சின் டிரைவர் பார்த்ததாகவும் கூறியுள்ளார் என்றும் தெரிகிறது. ரயிலை அவர் நிறுத்துவதற்குள் தருமபுரி ரயில் நிலையம் வந்துவிட்டது. இதனால் எஞ்சின் டிரைவர் உடனே தருமபுரி ஸ்டேசன் மாஸ்டரிடம் வாலிபர் ஒருவர் ரயிலில் தலையை கொடுக்க முயன்றார். அவர் என்ன ஆனார் என்று விசாரியுங்கள் என்று கூறியுள்ளார். பின்னர் ரயில் புறப்பட்டு சென்றுவிட்டது.
ஸ்டேசன் மாஸ்டரும் இது பற்றி போலீசாரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதை வைத்துப் பார்க்கும் போது, இளவரசன்தான் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்டார் என்று உறுதி படுத்தப் பட்டாலும் தலை சிதறாமல் எப்படி, அடி மட்டும் பட்டு இருக்கும் என்கிற சந்தேகமும் பலருக்கும் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
4tamilmedia thanks
No comments:
Post a Comment