பள்ளிக் கல்வித் துறையில், 400 பேர் கருணை அடிப்படையில் நியமனம்! பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு!!
[வெள்ளி - 19 ஜூலை-2013 -
பள்ளிக் கல்வித் துறையில் 400 பேர் விரைவில் கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணை அடிப்படையிலான பணி நியமனம் கோரி 2002-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை விண்ணப்பம் செய்தவர்கள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகங்களில் தங்களுடைய பெயர்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம் எனவும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் ஏற்கெனவே 1997-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரை கருணை அடிப்படையிலான நியமனத்துக்குத் தகுதி வாய்ந்த 397 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தகக்;;;து.
No comments:
Post a Comment