நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மந்தகதியில் இருப்பது கவலை அளிக்கிறது! பிரதமர் மன்மோகன் சிங் பேச்சு!!
[வெள்ளி - 19 ஜூலை-2013 -
நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தகதியில் இருப்பது கவலை அளிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தொழில் அதிபர்களுக்கு மத்தியில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தகதியில் இருப்பது கவலை அளிக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது உரையில், தேக்க நிலை, நிதி பற்றாக்குறையை சரி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், நடப்புக் கணக்கு பாற்றாக்குறைக்கு கட்டுக்குள் வந்துள்ளதாகவும், இந்;திய ரூபாயின் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த தங்கத்தின் மீதான முதலீட்டை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment