அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday 27 July 2013

கெய்ரோவில் இராணுவத் தாக்குதல் : மோர்ஸியின் ஆதரவாளர்கள் 70 பேர் பலி

எகிப்து தலைநகர் கெய்ரோவில் இன்று மோர்ஸியின் ஆதரவாளர்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற வன்முறையில் 70 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அல் ஜசீராவின் எகிப்திய தொலைக்காட்சி தெரிவிக்கையில், 120 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 4,500 க்கு மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் கூறுகிறது. கெய்ரோவின் இஸ்லாமிய பள்ளி அருகே எகிப்தின் முன்னாள் அதிபர் மோர்ஸியின் ஆதரவாளர்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் இன்று அதிகாலையிலேயே மோதல் வெடித்தது.

இராணுவத்தினர் காயப்படுத்துவதற்காக சுடவில்லை. கொல்வதற்காகவே சுடுகின்றனர் என மோர்ஸியின் ஆதரவாளர்களில் ஒருவர் தெரிவிக்கிறார். நேற்று வெள்ளிக்கிழமை தொடக்கம் மோர்ஸியின் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மீண்டும் வீதிகளில் இறங்கி, மோர்ஸியை மீண்டும் பிரதமராக்க வேண்டும் எனக்கோரி போராடி வருகின்றனர். மோர்ஸி இராணுவத்தினால் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் பதவியிலிருந்து கீழிறக்கப்பட்டதிலிருந்து இதுவரை அங்கு இடம்பெற்ற கலவரத்தில் 200க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் மோர்ஸி மீது தற்போது கொலைக் குற்றச்சாட்டு ஒன்றையும் பதிவு செய்துள்ள இராணுவம் அவரை தொடர்ந்து தடுத்து வைத்திருக்கிறது.

4tamilmedia thanks

No comments:

Post a Comment