அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday 27 July 2013

5 ரூபாய்க்கு எப்படி சாப்பிட முடியும்?: காங்கிரஸ் தலைவர்களுக்கு டெல்லி பிச்சைக்காரர்கள் கேள்வி!


வெறும் 5 ரூபாய்க்கு எப்படி சாப்பிட முடியும் என்று  டெல்லி பிச்சைகாரர்கள், காங்கிரஸ் தலைவர்களுக்கு கேள்வி எழுபியுள்ளனர்.

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் தொடர்பான புதிய புள்ளி விவரத்தை, சமீபத்தில் திட்டக் கமிஷன் வெளியிட்டது. அதில் இந்தியாவின் ஏழைகள் எண்ணிக்கை 21.9 சதவிகிதமாக குறைந்து விட்டது என்று கூறப்பட்டது. நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் வசிப்பவர்களில் தினமும் 33 ரூபாய் செலவு செய்பவர்களும் ஏழைகள் அல்ல என்றும் திட்ட கமிஷனர்அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தது. இதையடுத்து பிரதமர் அலுவலக தலைமை அதிகாரி தலைமையில் ஒரு குழு  அமைக்கப்பட்டு இந்த புள்ளி விவரம் குறித்த மறு ஆய்வு நடைபெறும் என்று மத்திய அரசு  கூறியிருந்தது. இது தொடர்பான சர்ச்சை இன்னமும் ஓய்ந்த பாடில்லை. இந்த சர்ச்சைக்கு பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜ்பப்பர் டெல்லியில் ஒரு மதிய உணவு  12 ரூபாய்க்கு கிடைக்கிறது என்று கூறினார்.

இதையும் தாண்டி ஒரு படி  போய், காங்கிரஸ் கட்சியின் எம்பி ரஷீத் மசூத் கூறும்போது, டெல்லியில் 5 ரூபாய்க்கு சாப்பாடு கிடைகிறது. சந்தேகமிருந்தால் ஜூம்மா மசூதி அருகே சென்று சாப்பிட்டு பாருங்கள் என்று கூறினார்.

காங்கிரஸ் தலைவர்களின் இந்த பதில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. காங்கிரஸ்  தொடர்ந்து தவாறான தகவல்களைக் கூறி மக்களை ஏமாற்றி  வருவதாக எதிர்கட்சிகளும் பொது மக்களும் விமர்சனம் வெளியிட்டுள்ளனர்.

ஜும்மா மசூதி பகுதியில் வசிக்கும் பிச்சைக்காரர்களில் ஒருவர் 5 ரூபாய்க்கு எப்படி சாப்பிட முடியும். இது கேலிக் கூத்தாக உள்ளது. ரம்ஜான்  விளம்பரம் செய்து  இருக்கலாம். ஆனால், அது மோசடி. 5 ரூபாய்க்கெல்லாம் சாப்பிடுவது என்பதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார்.

4tamilmedia. thanks

No comments:

Post a Comment