அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday 29 July 2013

மது போதையில் அதிகரித்து வரும் கொலைகள் குடும்ப தகராறில் தற்கொலைகளும் தாராளம்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில், கடந்த 10 நாட்களில், மதுபோதையின் காரணமாக ஏற்பட்ட குடும்ப தகராறில் மூவர் கொலை செய்யப்பட்டனர். குடிப்பழக்கத்திற்கு ஆளாவோருக்கு ஏற்படும் சந்தேகம்,
குடும்பங்களில் சச்சரவுகளும், மற்றும் விபத்துகளில் சிக்கி பலியாவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
டாஸ்மாக் கடைகள் அதிகரிப்பால், மது குடிப்போரின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. ஒரு காலத்தில் லைசென்ஸ் வைத்துள்ளவர்கள் மட்டுமே குடித்து வந்த நிலை மாறி, தற்போது வயது வித்தியாசமின்றி மது அருந்தி வருகின்றனர். "பார்'களில் இருக்கும் போது உள்ள "சோசலிசம்,' வெளியே வந்தபின் மாறிவிடுகிறது. போதை தலைக்கு ஏறியபின் வெறித்தனமாக மாறுகிறது. சிறிய சண்டை கூட, பெரிதாகிவிடுகிறது. பலர் வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். 
ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுவால் பாதிக்கப்பட்டோர் பலர். இதில் வேதனையான விஷயம், சிறிதுநேர போதையால் ஏற்பட்ட குடும்ப தகராறில், கடந்த பத்து நாட்களில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பரமக்குடி தலா ஒரு கொலை நடந்துள்ளது. ஏர்வாடி போலீஸ் ஸ்டேஷனில் இரண்டாம் நிலை காவலர் கவிதா, 30. இவரது கணவர் ராமநாதபுரம் வசந்த நகர் ஆட்டோ டிரைவர் ராஜா. திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகிறது. இரு குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்றுமதுபோதையில் வீட்டிற்கு வந்த கணவரை, கவிதா கண்டித்தார். இதில் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த கவிதா, கணவர் முன் தீக்குளித்தார். காப்பாற்ற முயன்ற ராஜாவுக்கும், காயம் ஏற்பட்டது. இருவரும், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டனர். இதில் ராஜா இறந்தார். ராமேஸ்வரத்தில் போதையில் மனைவியை கொலை செய்துவிட்டு, அருகில் படுத்திருந்த பரிதாபம், மறுநாளில்தான் செய்த தவறை உணர்ந்துள்ளார். நல்ல வேலை செய்யும் நபராக இருந்தும், மதுவின் காரணமாக வேலையை தொலைத்தவர்கள், மதுவால் கணவரின் தவறுக்கு, மனைவி தற்கொலை செய்த சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ராமநாதபுரம் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மீனாம்பாள் கூறியதாவது: போதையில் மனைவியை அடிப்பதாக ஆண்டுக்கு, 100க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. இதில் இருவரையும் அழைத்து, உரிய கவுன்சிலிங் கொடுத்ததின் மூலம் தற்கொலைகள் தடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் மது வாங்க பணம் கேட்டு அடிப்பதாக, பெண்களிடமிருந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளது, என்றார். 
ராமநாதபுரம் மனநல டாக்டர் பெரியார் லெனின் கூறியதாவது: மது, கட்டுப்பாட்டை இழக்க செய்யும். முடிவு எடுக்கும் தன்மையை குறைந்துவிடும். போதையில் வாகனம் ஓட்டுவோரின் மனோபாவத்தை மாற்றும். விபத்தில் சிக்கும் அபாயம் அதிகம். கோபத்தை அதிகரிக்க செய்யும். சந்தேகத்தை வலுப்படுத்தும். போதைக்கு அடிமையானவர்களின் காதில், மாயக்குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். இது தவறானதை மூளைக்கு அனுப்பி, தவறான செயல்களில் ஈடுபடுத்தும். டாக்டர் ஆலோசனைபடி, பழக்கத்தை மாற்றினால் வாழ்வு சிறக்கும், என்றார்.


news dinamalar thanks

No comments:

Post a Comment