அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 18 July 2013

மலாலாவுக்கு தலிபான்கள் எச்சரிக்கை

[ வியாழக்கிழமை, 18 யூலை 2013, 
பாகிஸ்தானுக்கு திரும்பி வந்து பெண்கள் மதரஸாவில் சேர்ந்து படிக்குமாறு மாணவி மலாலா யூசுப்சாய்க்கு தலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப்பை கொல்ல முயன்ற வழக்கில் தேடப்படும் குற்றவாளியும், தலிபான் போராளியுமான அட்னன் ரஷீத் இணையத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில், மலாலா உடனடியாக நாடு திரும்ப வேண்டும், அத்துடன் இஸ்லாமிய மற்றும் பாஷ்தூன் கலாசாரத்தை பின்பற்ற வேண்டும்.
உனது சொந்த ஊரில் உள்ள ஏதாவது ஒரு மதரஸாவில் சேர்ந்து அல்லா பற்றிய புத்தகத்தைப் படித்து அறிய வேண்டும்.
முஸ்லிம் பெண்களின் நிலை குறித்து எழுதுவதுடன், புதிய உலக நடைமுறை என்ற பெயரில் உன்னதத்தை புறக்கணித்து, தீய திட்டங்கள் மூலம் ஒட்டுமொத்த மனிதர்களையும் அடிமைப்படுத்த நினைக்கும் சதிகாரர்களின் திட்டத்தை அம்பலப்படுத்த வேண்டும்.
நீ பள்ளிக்கு போகிறாய் என்பதற்காகவோ அல்லது நீயொரு கல்வி ஆர்வலர் என்பதாலேயோ தலிபான்கள் உன்னைத் தாக்கவில்லை. தலிபான்களோ, முஜாஹிதீன்களோ கல்விக்கு எதிரானவர்கள் அல்ல, யார் வேண்டுமானாலும் கல்வி கற்கலாம்.
தலிபான்களுக்கு எதிராக எழுதியதாகவும், ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியில் இஸ்லாமிய முறையை நிலைநாட்ட தலிபான்கள் மேற்கொண்ட முயற்சிக்கு எதிராக பிரசாரம் செய்ததாகவும், உனது எழுத்துகள் ஆத்திரமூட்டும் விதத்தில் இருந்ததாகவும் தலிபான்கள் நம்புகின்றனர்.
ஸ்வாட் பள்ளத்தாக்கில் பள்ளிகள் இடிக்கப்பட்டற்கு தலிபான்கள் மட்டுமே பொறுப்பு கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஐ.நா.சபையில் சமீபத்தில் மலாலா ஆற்றிய உரையை மேற்கோள்காட்டியுள்ள அட்னன் ரஷீத், மலாலா நீ எதிரிகளின் கைப்பாவையாக உள்ளாய், மற்றவர்களுக்காக நீ பேசுகிறாய்.
வாளை விட பேனா சக்தி வாய்ந்தது என்பதை நீ உணர வேண்டும். ஆயுதங்களை விட வார்த்தைப் போர் அதிக அழிவை ஏற்படுத்தும் என்பதை மறந்து விடாதே என்று அறிவுரை கூறியுள்ளார்.

newsonews. thanks

No comments:

Post a Comment