அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 18 July 2013

பீகாரை தொடர்ந்து டெல்லி, தமிழகத்தில் மாணவர்கள் மயக்கம்: அதிர்ச்சியில் பெற்றோர்கள்

[ வியாழக்கிழமை, 18 யூலை 2013, 
பீகார் அரசுப் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்த சர்ச்சை அடங்குவதற்குள், டெல்லி மற்றும் தமிழகத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தின் நெய்வேலி அரசு பெண்கள் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பள்ளியில் மாணவிகள் சாதம் மற்றும் முட்டை சாப்பிட்டுள்ளனர்.
மதிய உணவில் பல்லி விழுந்ததா அல்லது விஷ பொருள் எதுவும் கலப்படம் ஆனதா என்றும் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் யாருக்கும் அபாயக்கட்டம் இல்லை என்றும் , பெரும் பாதிப்பு இல்லை என்றும் மாவட்ட ‌கலெக்டர் கிர்லோஸ்குமார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே டெல்லியில் மாண, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்ட குழந்தைகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேரு ஷெகாத் யோஜானா என்ற சமூக நலத்துறையினர் மூலம் சத்துமாத்திரை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின்கீழ் பாரத்நகர் பகுதி அரசு பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் பலர் மயக்கமுற்றனர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 22 பேர் பலியாயினர்.
இதனையடுத்து இந்த மாநிலத்தில் மதிய உணவு பரிமாறும் போது பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சமையல் காரர்கள் முதலில் சாப்பிட்டு பார்த்து பின்னர் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

newindianews thanks

No comments:

Post a Comment