
இன் நிலையில் கடந்த 1ம் திகதி அதிகாலை, பானந்துறையில் உள்ள வீதி ஒன்றில் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் முன்பக்க லைட் எரிந்துகொண்டு இருந்ததால் சந்தேகப்பட்ட பொலிசார் அருகில் சென்று பார்த்துள்ளார்கள். உள்ளே ஒரு நபர் பயணிகள் ஆசனப் பக்கமாக சரிந்து கிடந்துள்ளார். அவர் காருக்கு உள்ளே பாட்டுச் சத்தம் கேட்டுக்கொண்டு இருந்திருக்கிறது. பின் பக்க சீட்டில் சாரயப் போத்தல் ஒன்றும் இருந்திருக்கிறது. குடிவெறியில் இவர் கிடப்பதாக முதலில் நினைத்த பொலிசார், அவரது மூக்கில் இருந்து வந்த ரத்ததைப் பார்த்து சுதாரித்துக்கொண்டார்கள். மேலதிகப் பொலிசாரின் உதவியை அவர்கள் நாடியுள்ளார்கள். பின்னர் எஸ்.பி - ஐ.எஸ்பி என்று பலரும் சம்பவ இடத்துக்கு வந்து உள்ளால் பூட்டப்பட்டிருந்த கதவைத் திறந்தார்கள். இந்திரஜித் கழுத்தை யாரோ நசுக்கி கொலைசெய்துள்ளார்கள் என்று வைத்தியர்கள் சான்றிதழ் வழங்கினார்கள். இது எவ்வாறு நடந்தது என்று பொலிசார் குழம்பியவேளை, 3ம் திகதி காலை ஒரு பெண் பானந்துறைப் பொலிசாரிடம் சரணடைந்தார்.

அவர் நான் தான் இந்திரஜித்தை கொலைசெய்தேன் என்றார். இந்திரஜித்திற்கும் எனக்கு பழக்கம் இருந்து வந்தது. அவர் ஒரு குடிகாரர். சம்பவதினத்தன்றும் குடித்துவிட்டு வந்திருந்தார். காரில் நான் இருந்தேன். என்னோடு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு இறுதியில் என் ஜாக்கெட்டை கிழித்தார். பிராவையும் களற்றினார். ஆனால் நான் அதனை அவர் கைகளில் இருந்து பிடுங்கி எடுத்து அவர் கழுத்தை சுற்றி, இறுக்கினேன் என்று தெரிவித்துள்ளார் சஞ்சீவினி. இதனையடுத்து நான் இறங்கிச் சென்று ஆட்டோ ஒன்றைப் பிடித்து வீட்டுக்குச் சென்றுவிட்டேன். மறுநாள் சம்பவ இடத்துக்குச் சென்றேன் ஆனால் அங்கே பொலிசார் இருந்தார்கள். மற்றும் இந்திரஜித் கொலைசெய்யப்பட்டதாக அங்கே பேசினார்கள். இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தேன் என்றாள் சஞ்சீவினி. தான் கொலைசெய்ய பாவித்த ஜாக்கெட் மற்றும் பிராவைத் தான் , தற்போதும் அணிந்திருக்கிறேன் என்று நீதிமன்றில் அவர் குண்டைத் தூக்கிப்போட்டார், பொலிசார் அப்படியே ஆடிப்போனார்கள் போங்கள்.....
athirvu thanks
No comments:
Post a Comment