08 July, 2013 by admin

ஆனால் குறிப்பிட்ட அம் மருந்தில், ஆட்கொல்லி இரசாயனப் பொருட்கள்(மூலக்கூறுகள்) இருப்பதாக தேசிய சுகாதார நிலையம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில், 6 மாதகாலம் குளிராகவும் 6 மாதகாலம் கோடையாகவும் இருக்கிறது. குளிர்காலங்களில் மரத்தின் இலைகள் உதிர்ந்து அவை உறக்க நிலைக்குச் செல்கிறது. பல மாதங்கள் கழித்து கோடைகாலம் வரும்போது மரங்கள் மெல்ல துளிர்விட்டு பூ பூக்கிறது. அதனால் தான் அதில் உண்டாகும் மகரந்த ப் பொடிகளும் மிகவும் சக்திவாய்ந்தவையாக உள்ளது. இலங்கை போன்ற வெப்ப நாடுகளை எடுத்துக்கொண்டால், அங்கே ஆண்டு முழுவதும் கோடை காலம் நிலவுகிறது. அதனால் அங்கே , விளையும் பூக்களில் உள்ள மகரந்தம் சாதாரண நிலையில் காணப்படும். அவை மனித உடலுக்கு தீங்கு விளைவிக்காது. ஆனால் வெளிநாடுகளில் உள்ள மகரந்த பொடிகள் சகதி வாய்ந்தவை. அவை சுவாசக் குழல் வழியாக எமது உடலை அடையும்வேளை, அதனை எமது உடல் எதிர்க்க ஆரம்பிக்கும்.
இதனால் கண்கள் கடிக்கிறது. தும்மல் அதிகரிக்கும், கண்களில் இருந்து கண்ணீர் வரும். சளி பிடிக்கும். பின்னர் அதனால் தலையிடி என்று பல பல உபாதைகளைக் கொண்டுவரும். இதனைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க பல மருந்துப் பொருட்கள் உள்ளது. ஆனால் இதுவரை நிலந்தர மருந்து என்று ஒன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். எனவே நீங்கள் இன்ரர் நெட்டில், அல்லது பொய்யான தேசிய சுகாதார நிலைய துண்டுப் பிரசுரங்களை பார்த்து ஏமாரவேண்டாம்.
[hay fever] இதில் இருந்து எம்மை எப்படி பாதுகாப்பது ?
அதாவது கோடை காலங்களில் மூக்கிற்கு உள்ளே வளரும் முடியை வெட்டவேண்டாம். அது மகரந்தங்கள் உள்ளே செல்வதை தடுக்கும். பொதுவாக சற்று உடல் நலம் குறைந்தவர்களையே இது தாக்கும். எனவே உடலை நீங்கள் நன்கு கவனிக்கவேண்டும். அதிலும் குறிப்பாக நீச்சல் அடிப்பது நல்லது. அதனால் உங்கள் சுவாசப் பை திடகாத்திரம் அடையும். அதிகம் வெளியே செல்வதைக் குறைக்கலாம். கோடை காலங்களில் காலை வேளை மற்றும் மதியவேளைகளில், மகரந்தப் பொடிகள் காற்றில் அதிகம் காணப்படும். முகத்தைச் சுற்றி ஒரு துணியால் கட்டிக்கொள்ளலாம். இதற்கான அலேர்ஜி மாத்திரைகள் தாராளமாகக் கிடைக்கிறது. அதில் ஒன்றை ஒரு நாளைக்கு பாவிக்கலாம். நல்ல உடற்பயிற்ச்சி செய்வதன் மூலம் இதில் இருந்து தப்பிக்கலாம்.
இதில் ஒரு சூட்சுமமும் இருக்கிறது: அதாவது நீங்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் மரங்களில் இருந்து வரும் மகரந்தப் பொடிகளால் தான் உங்களுக்கு இந்த அலேர்ஜி தோன்றுகிறது. எனவே அருகில் உள்ள பண்ணையை அணுகி, அவர்களிடம் உள்ள "தேன்" தேனை வாங்கி பருகிவருவதன் மூலம் அதனை ஒரு அளவுக்கு கட்டுப்பாட்டில் கொண்டுவரலாம். அந்த ஏரியாவில் உள்ள தேனில், இயற்கையாகவே நோய் எதிர்பு சக்தி இருக்கும்( மகரந்த எதிர்ப்பு) எனவே நீங்கள் தேனைப் பருகி வந்தாலே இந் நோயில் இருந்து 80% குணமடைய வாய்ப்புகள் இருக்கிறது. என் எனில் அந்த ஏரியால் உள்ள பூக்களில் உள்ள தேனைத்தான், தேனிக்கள் சேகரிக்கின்றன. அதனை நாம் பருகி வந்தால், நோய் எதிர்பு சகதி தானாகக் கிடைக்கும்.
news athirvu thanks
No comments:
Post a Comment