நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரை விரைவில் கூட்டுமாறு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கால கூட்டத் தொடரில் நிலக்கரி ஊழல் விவகாரத்தைக் எழுப்பி, பிரதமர் மனோகன் சிங், பதவி விலக வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதே போல எதிர்கட்சிகள் மேலும் பல பிரச்சனைகளை எழுப்பி, நாடாளுமன்ற பட்ஜெட் கால கூட்டத் தொடரை பெரும்பாலான நாட்களில் முழுவதுமாக முடக்கி வைத்தன.
இதனால், உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் மத்திய அரசு திணறியது. இதை அடுத்து உணவுப் பாதுகாப்பு மசோதாவை அவசர சட்டமாக கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்து, குடியரசுத் தலைவர் ஒப்புதலும் கிடைத்துவிட்ட நிலையில், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் எப்போது என்கிற கேள்வி எழுந்துள்ளது.
வழக்கமாக நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை மாதம் 3 வது வாரம் தொடங்கி சுமார் ஒரு மாத காலம் நடைபெறும். இந்த ஆண்டின் இறுதியில் டெல்லி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு போதிய கால அவகாசம் வேண்டும் என்பதால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் விரைவில் கூட்டப்பட வேண்டும் என்று அந்த மாநிலங்களை சேர்ந்த அரசியல் தலைவர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
எனவே, ஆகஸ்ட் மாதம் 15ம் திகதிக்குப் பிறகு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் விரைவில் கூட்டப்பட வேண்டும் என்று, அந்த மாநிலங்களை சேர்ந்த அரசியல் தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, ஆகஸ்ட் மாதம் 15ம் திகதிக்கு பிறகு நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கூட்டப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. என்றாலும் இந்த விஷயத்தில் முடிவு எடுப்பதில் மத்திய அரசு அவசரம் காட்ட விரும்பவில்லை என்பதால், அனேகமாக செப்டெம்பர் மாத தொடக்கத்தில் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கலாம் என்று கருதப்படுகிறது.
4tamilmedia thanks
No comments:
Post a Comment