ராமேசுவரம், ஜூலை 8-
ராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்தவர் சூசை இன்னாசி (வயது 40). மீனவர். இவர் அங்குள்ள மார்க்கெட் தெரு அருகில் அரசு டாஸ்மாக் மதுக்கடையில் மது குடிப்பதற்காக 180 மில்லி அளவுள்ள பிராந்தி பாட்டில் ஒன்று வாங்கினார்.
அந்த பாட்டிலுடன் அங்கிருந்த மதுக்கூடத்துக்குச் சென்று நண்பர்களுடன் குடிக்க தயாரானார். இதற்காக அந்த பாட்டிலை திறக்க முயன்ற போது அதில் பாம்பரணை ஒன்று இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதை அருகில் இருந்த மற்றவர்களிடம் காட்டினார். செத்து கிடந்த அந்த பாம்பரணையை பார்த்து அவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த டாஸ்மாக் கடைக்கு வந்திருந்த மற்ற குடிமகன்கள் பீதி அடைந்தனர்.

news maalaimalar thanks
No comments:
Post a Comment