
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் போயிங் 777 ரக மிகப் பெரிய பயணிகள் விமானம் ஓடுதளத்தின் காம்பவுண்ட் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இருவர் பலியாகியுள்ளதோடு, 150 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் விமான நிலையம் மூடப்பட்டது.
தென் கொரியாவின் சியோல் நகரத்தில் இருந்து 300 பயணிகளை ஏற்றி கொண்டு ஆசியனா ஏர்லைன்ஸ் போயிங் 777 ரக விமானம் அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகருக்கு வந்தது.
இது அமெரிக்க விமானங்களிலேயே 2வது மிகப் பெரிய பயணிகள் விமானமாகும். இது வழக்கம் போல் 28ஆவது ஓடுதளத்தில் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது.
அப்போது ஓடுதளத்தில் தரையிறங்கிய சில வினாடிகளில் அதன் வால் பகுதி காம்பவுண்ட் சுவரில் மோதியது. இதில் விமானத்தின் வால் பகுதி உடைந்து தீப்பிடித்து கொண்டது.
மேலும், விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடு பாதையில் விழுந்து நொறுங்கியது. இதனால் பயணிகள் அலறி அடித்து கூச்சல் போட்டனர். உடனடியாக விமான நிலையத்தில் இருந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
அதற்குள், விமானத்தில் இருந்து அவசர கதவு வழியாக பயணிகள் சிலர் கீழே குதித்தனர். இதில் பலர் காயம் அடைந்தனர். தீயணைப்பு படையினரும், மீட்பு படையினரும் பயணிகளை மீட்டனர்.
இந்த விபத்தில் 150க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் ஏற்பட்ட தீயில் கருகி 2 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
காயம் அடைந்தவர்களில் குழந்தைகள் உள்பட 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்தை அடுத்து விமான நிலையம் மூடப்பட்டது.
அடுத்தடுத்து வந்த விமானங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன. விபத்துக்கான காரணம் குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
thamilan thanks
.
.
No comments:
Post a Comment